ETV Bharat / state

'நான் கூப்பிடும் போதெல்லாம் வரணும்' - சிறுமியை தொடர்ந்து பாலியல் வல்லுறவு செய்த மாணவன்! - Sexual Harassment for Student

மதுரை: காளவாசல் பகுதியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி மாணவன் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது.

மாணவிக்கு பாலியல் வன்கொடுமை
மாணவிக்கு பாலியல் வன்கொடுமை
author img

By

Published : Dec 27, 2019, 11:06 PM IST

மதுரையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரின் மகளான 15 வயது சிறுமி நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியின் விடுதியில் தங்கி 11ஆம் வகுப்பு படித்துவருகிறார். விடுதியில் மகள் தங்கி படிப்பதால் பெற்றோர் செல்போன் வாங்கிக் கொடுத்துள்ளனர்.

ஆனால் மாணவி தனது செல்போனில் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற செயலிகளை பதிவேற்றம் செய்து அதிலேயே மூழ்கினார். இந்நிலையில் மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவன் அல்ஹசனுடன் (19) பழக்கம் ஏற்பட்டுள்ளது. பழக்கம் தொடர்ந்ததையடுத்து அல்ஹசன் மாணவியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

தொடர்ந்து அல்ஹசன் மாணவியிடம், 'உன்னை தனிமையில் சந்திக்க வேண்டும்' என்று பேசியுள்ளார். அதைநம்பி மாணவி விடுதியில் உள்ள வார்டனிடம் பொய் சொல்லிவிட்டு வெளியே வந்துள்ளார். இதனையடுத்து அல்ஹசனும் மாணவியும் சேலம், நாமக்கல் எனச் சுற்றி பார்த்துவிட்டு இரவு தனியார் விடுதியில் தங்கியுள்ளனர்.

பின்னர் அல்ஹசன் மாணவியுடன் தனியாக இருந்த புகைப்படங்களை வைத்து, 'நான் கூப்பிடும் போதெல்லாம் வர வேண்டும், இல்லை என்றால் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் போட்டுவிடுவேன்' என மிரட்டியுள்ளார். அல்ஹசன் கூறியதைக் கேட்டு பயந்துபோன மாணவி அடிக்கடி வார்டனிடம் பொய் சொல்லி விட்டு வெளியே சென்றுள்ளார். இதனைப் பயன்படுத்திக்கொண்டு அல்ஹசன் மாணவியை அடிக்கடி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மாணவிக்கு பாலியல் வன்கொடுமை

மாணவி தொடர்ந்து வெளியே செல்வதால் சந்தேகமடைந்த வார்டன் பெற்றோரிடம் கூறியுள்ளார். அதனடிப்படையில் பெற்றோர் மாணவியை மதுரைக்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். அப்போது மாணவி அனைத்து உண்மைகளையும் கூறியுள்ளார்.

இதைக்கேட்டு ஆடிப்போன மாணவியின் பெற்றோர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இப்புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் தனிப்படை அமைத்து அல்ஹசனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

இதையும் படிங்க: சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த காவலர் போக்சோவில் கைது!

Intro:*மதுரையில் 11ஆம் வகுப்பு மாணவியை இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி மாணவன் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது*Body:*மதுரையில் 11ஆம் வகுப்பு மாணவியை இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி மாணவன் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது*

*அரை நிர்வாண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக பயமுறுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக அதிர்ச்சித் தகவல்*

மதுரை காளவாசல் பகுதியை சேர்ந்த பிரபல தொழிலதிபரின் ஒரே மகளான 15 வயது சிறுமி இவர் அதே பகுதியில் பத்தாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு மேற்படிப்பிற்காக நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு விடுதியில் தங்கி படித்து வருகிறார்,இந்த நிலையில் தாய் தந்தையரை தொடர்பு கொள்வதற்காக தன் ஒரே மகளுக்கு தந்தை 60 ஆயிரம் மதிப்புள்ள ஐ போனை வாங்கி கொடுத்துள்ளார், ஐபோனை பயன்படுத்திய சிறுமி இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்,வாட்ஸ்-அப் மூலம் சமூக வலைதளங்களில் மூழ்கி கிடந்துள்ளார்,இந்த நிலையில் இன்ஸ்டாகிராமி மூலம் பழக்கம் ஆகிய ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவன் அல்ஹசன் இவர் தன்னுடைய உறவினர் வீடான அனுப்பானடி பகுதியில் தங்கி கேகே நகர் பகுதியில் உள்ள பிரபல கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்,இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் மூலம் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவியை அவ்வப்போது பேசி மயக்கிய இளைஞர் அவரிடம் தன் காதலிப்பதாக கூறி ஆசை வார்த்தைகளை அளித்து அவருடன் பழகி வந்துள்ளார், இந்த நிலையில் மாணவியை நேரில் சந்திக்க வேண்டுமென மாணவன் தெரிவித்ததை தொடர்ந்து மாணவியின் அறிவுரையின் பெயரில் மாணவியின் தாய் தந்தையரின் அழைப்பது போன்று அவர் தங்கியிருந்த விடுதிக்கு மின்னஞ்சல் மூலம் மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளார், அதை நம்பிய விடுதி நிர்வாகம் தாய் தந்தையர் தான் மதுரைக்கு அனுப்ப சொல்லுகிறார்கள், என்று நம்பி விடுதியிலிருந்து மாணவியை அனுப்பி வைத்துள்ளனர்,ஆனால் மதுரையில் இருந்து இருசக்கர வாகனம் மூலம் நாமக்கல் சென்ற இளைஞன் விடுதி வாசலில் காத்திருந்து மாணவி அழைத்துக்கொண்டு சேலம் நாமக்கல் என இரு சக்கர வாகனத்தில் முழுமையாக சுற்றி பார்த்துவிட்டு இரவு தனியார் விடுதியில் தங்கி உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது,இந்த நிலையில் தொடர்ந்து வீட்டிலிருந்து மின்னஞ்சல் வந்து மகளை வெளியே அழைத்துச் சென்று கொண்டிருந்த இளைஞன் விடுதியில் உள்ள வார்டனுக்கு சந்தேகம் எழ உங்கள் தந்தையரை பார்க்கவேண்டும் என தந்தையை அழைத்து விசாரித்தபோது தான் பல அதிர்ச்சி அளிக்கக்கூடிய தகவல்கள் வெளியாகிஉள்ளது, புகைப்படங்களை வைத்து நான் கூப்பிடும் இடத்திற்கு நீ வரவில்லை என்றால் உன்னை புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என இளைஞன் மிரட்டியதால் மாணவியை தன்னுடைய தாய் தந்தையரின் மின்னஞ்சல் மூலம் மாணவி விடுதியை விட்டு வெளியே வருவதற்காக திட்டங்களை வகுத்து கொடுத்ததும் அதை பயன்படுத்தி இளைஞனும் மாணவியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது, அதனை தொடர்ந்து விடுதியில் இருந்து வீட்டிற்கு அழைத்து வந்த விசாரணை நடத்தியபோது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி இதைத் தொடர்ந்துதான் அவன் கூப்பிடும் இடத்திற்கு சென்றதாகவும் அவர் பாலியல் வன்கொடுமை செய்த தாகவும் தாய் தந்தையிடம் சிறுமி அளித்த தகவலை தொடர்ந்து தாய் தந்தையர் மதுரை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்,அந்த புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் சீதாலட்சுமி அவர்களின் தலைமையில் தனிப்படை இளைஞரை கைது செய்து அவருடைய தொலைபேசிகளை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது, இன்ஸ்டாகிராமில் மூலம் பழகிய பழக்கம் இறுதியில் பாலியல் வன்கொடுமை செய்யும் அளவுக்கு ஒரு பள்ளி மாணவியின் வாழ்க்கையை நாசமாக்கும் அளவுக்கு மாறிய சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.