நாடு முழுவதும் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக பலர் தங்களது குரலை எழுப்பி வருகின்றனர். அந்த வகையில் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான விழிப்புணர்வு ஓவியங்களை திருப்பரங்குன்ற காவல் நிலைய சுவர் சுமந்துவருகிறது.
அந்தவகையில், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிபவர் மதன கலா இவர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களை தடுக்கும் பொருட்டு திருப்பரங்குன்றம் காவல் நிலைய சுற்று சுவர்களில் விழிப்புணர்வு ஓவியம் வரைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
காவல் ஆய்வாளர் மதன கலாவின் இந்த முயற்சிக்கு மகளிர் அமைப்பினர் என பலரும் பாராட்டுகளை தெரிவித்துவருகின்றனர்.
இதையும் படிங்க...புதிதாகப் பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கான சட்டப்பேரவைத் தொகுதிகள் அறிவிப்பு!