மதுரை தெற்கு பெருமாள் மேஸ்திரி வீதியிலுள்ள ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு அரிசி பருப்பு காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருள்களை தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "பண்டக சாலையில் இருந்து நியாயவிலை கடைகளுக்கு எடுத்து வரப்படும் பொருள்கள் எடை குறைவாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டுகளுக்கு போதுமான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். ஜிபிஎஸ் கருவிகள் மூலமாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சீன விவகாரத்தைப் பொறுத்தவரை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை விட தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி மிக சாதுர்யமாக செயல்பட்டு வருகிறார். விவரமாக எல்லைப் பாதுகாப்பு விவகாரத்தில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வார். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து தலைவர்களும் தங்களது பாதுகாப்பை கவனத்தில் கொள்ள வேண்டும். அதே நேரம் பொது வாழ்க்கையில் இயங்கக்கூடிய நாம் ஜனநாயக கடமையை சிறப்புடன் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
இதையும் படிங்க: சென்னையிலிருந்து வெளியேறத் துடிக்கும் மக்கள்!