ETV Bharat / state

நான் பேசல.. பதறிய செல்லூர் ராஜூ.. சசிகலா ஆடியோ விவகாரத்தில் நடந்தது என்ன? - ஆடியோ லீக் செல்லூர் ராஜூ விளக்கம்

“சமூக வலைதளங்களில் பரவும் ஆடியோவில் உள்ள குரல் என்னுடையது அல்ல, எனக்கும் அந்த ஆடியோவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார்.

சசிகலாவுக்கு ஆதரவாக தொண்டர்களிடம் பேசும் செல்லூர் ராஜூ

author img

By

Published : Dec 3, 2021, 5:02 PM IST

மதுரை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலாவுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாக சமூக வலைதளங்களில் வெளியாகும் ஆடியோ குறித்து செல்லூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சமூக வலைத்தளங்களில் பரவும் ஆடியோவில் உள்ள குரல் என்னுடையது இல்லை. எனக்கும் அந்த ஆடியோவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம், எங்களுடைய வளர்ச்சி பிடிக்காத சில சமூக விரோதிகளால் இந்த ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தலைமையிடம் கலந்தாலோசித்த பிறகு காவல் துறையில் புகார் அளிக்க முடிவு செய்திருக்கிறேன்.

ஆடியோ லீக் பின்னணி என்ன- செல்லூர் ராஜூ விளக்கம்

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருவதை முன்னிட்டு கட்சியினரிடையே கலகத்தை ஏற்படுத்தும் நோக்கோடு இந்த ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது.

சமூக விரோதிகள் பொய் பரப்புரை

அதிமுகவின் வளர்ச்சி பிடிக்காத சமூக விரோதிகளால் இது பரப்பப்படுகிறது. சசிகலா விவகாரத்தில் உங்களையே குறி வைத்துத் தாக்குதல் நடத்த என்ன காரணம் எனச் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, "ஊடகங்கள் மற்றும் மக்கள் மத்தியில் நல்ல பெயர் உள்ளதால் இது போன்ற பொய்ப் பரப்புரையை பரப்பி விடலாம் என சமூக விரோதிகள் முயற்சி செய்யலாம்.

என்னை வைத்து கழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. சசிகலா வருகை குறித்து தலைமை தான் முடிவு எடுக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: சாலமன் பாப்பையா, பாரதி பாஸ்கர் முதலமைச்சருடன் சந்திப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.