மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் தொடர் தீக்குளிப்பு முயற்சிகளால் அங்கு வருகின்ற மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் கோட்டப்பட்டியைச் சேர்ந்தவர் வனிதா. இவர் தனது கணவரை மீட்டு தர வலியுறுத்தி மதுரை ஆட்சியர் அலுவலகம் முன்பு மூன்று குழந்தைகளுடன் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார்.
அப்போது பாதுகாப்பிற்கு நின்றிருந்த காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்து தல்லாகுளம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெற்ற நேற்றும் இரண்டு பேர் தீக்குளிக்க முயற்சி செய்த நிலையில், இன்றும் ஒரு பெண் தீக்குளிக்க முயற்சி செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கரோனாவால் மும்பையில் பொதுபோக்குவரத்து முடங்கும் அபாயம்!