ETV Bharat / state

காமராஜரை அவமதித்தவர் கருணாநிதி- சீமான் குற்றச்சாட்டு !

மதுரை :முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களின் பெயர்களை பெருந்தலைவர் என்ற அழைக்க உத்தரவிட்டு காமராஜரை அவமானப்படுத்தினார் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரை மாவட்டச் செய்திகள்  madurai district news  நாம் தமிழர் கட்சி  நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  காமராஜரை அவமதித்த கருணாநிதி
நாம் தமிழர் மாவீரர் நாள் நிகழ்வு 2019
author img

By

Published : Nov 28, 2019, 8:25 AM IST

மாவீரர் தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே நினைவேந்தல் பொதுக்கூட்டத்தை நாம் தமிழர் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் ஈழத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்ல பொறுப்பாளர் பொன். தியாகம் கலந்துகொண்டு தியாகச்சுடரை ஏற்றினார்.

பின்னர் நிகழ்வில் பேசிய சீமான், "காங்கிரஸ் கட்சியைத் தோற்கடிப்பதற்காகவே திமுக, பேரறிஞர் அண்ணாவால் தோற்றுவிக்கப்பட்டது. அச்சமயத்தில் முதலமைச்சர் வேட்பாளராக இல்லாமல் விருதுநகரில் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட்ட காமராஜர் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டார்.

மாவீரர் நாள் நிகழ்வில் சுடரேற்றிய பொன் தியாகம்

காமராஜரைச் சந்தித்துவிட்டு கருணாநிதியைச் சந்திக்கச் சென்ற ஒரு நபர் பெருந்தலைவரைப் பார்த்துவிட்டு வருகிறேன் என்று சொன்னார். அதைக்கேட்டு, பின்பு காமராஜரை அவமதிக்கும் விதமாக அனைத்து ஊராட்சி ஒன்றியத் தலைவர்களைப் பெருந்தலைவர் என அழைக்க உத்தரவிட்டார்.

காமராஜர் முதலமைச்சராக ரஷ்யா சென்றபோது, முன்பெல்லாம் ரஷ்யாவுக்கு எருமைத் தோலை அனுப்பினோம். தற்போது எருமையை அனுப்புகிறோம் என்று காமராஜரை அவமதித்துப்பேசினார். விருதுநகரில் கருவாடு விற்கும் சிவகாமியின் சீமந்த புத்திரன் என்று காமராஜரை இழிவுப்படுத்தினார். தமிழர்களுக்கு திமுகவும் கருணாநிதியும் செய்த துரோகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல " என்றார்.

பெருந்தலைவர் காமராஜரை அவமதித்தவர் மு. கருணாநிதி

மேலும் பேசுகையில், " ஈழ விடுதலைக்காக உயிரை தியாகம் செய்தவர்களை நினைவு கூறும் மாவீரர்கள் நாள் நிகழ்வை திமுகவோ அதன் கூட்டணிக்கட்சிகளோ எப்போதும் முன்னெடுப்பதில்லை. நாம் தமிழர் கட்சி மட்டுமே அதனை செய்து வருகிறது. இனியும் தொடர்ந்து செய்யும் "என்றார்.

இதையும் படிங்க: பாத்திமாவின் லேப்டாப், டேப்பை சமர்ப்பித்தேன் - அப்துல் லத்திப்

Intro:காமராஜரை அவமானப்படுத்தவே ஊராட்சி ஒன்றிய தலைவர்களுக்கு பெருந்தலைவர் என பெயர் சூட்டினார் கருணாநிதி' - சீமான் குற்றச்சாட்டு

பெருந்தலைவர் என்று அழைக்கப்பட்ட காமராஜரை அவமதிக்கும் பொருட்டே ஊராட்சி ஒன்றிய தலைவர்களை பெருந்தலைவர் என அழைக்க உத்தரவிட்டார் கருணாநிதி என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றச்சாட்டு.
Body:'காமராஜரை அவமானப்படுத்தவே ஊராட்சி ஒன்றிய தலைவர்களுக்கு பெருந்தலைவர் என பெயர் சூட்டினார் கருணாநிதி' - சீமான் குற்றச்சாட்டு

பெருந்தலைவர் என்று அழைக்கப்பட்ட காமராஜரை அவமதிக்கும் பொருட்டே ஊராட்சி ஒன்றிய தலைவர்களை பெருந்தலைவர் என அழைக்க உத்தரவிட்டார் கருணாநிதி என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றச்சாட்டு.

மாவீரர் தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே நினைவேந்தல் பொதுக்கூட்டத்தை நாம் தமிழர் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் ஈழத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்ல பொறுப்பாளர் பொன் தியாகம் தியாகச்சுடரை ஏற்றினார். பிறகு அப்துல் ரவூப் நினைவு கொடிக்கம்பத்தில் நாம் தமிழர் கட்சிக் கொடியை ஏற்றினார்.

பிறகு பேசிய சீமான், 'காங்கிரஸ் கட்சியைத் தோற்கடிப்பதற்காகவே திமுக, பேரறிஞர் அண்ணாவால் தோற்றுவிக்கப்பட்டது. அச்சமயத்தில் முதல்வர் வேட்பாளராக இல்லாமல், விருதுநகரில் சட்டமன்ற உறுப்பினராகப் போட்டியிட்ட காமராஜர் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டார்.

காமராஜரைச் சந்தித்துவிட்டு கருணாநிதியைச் சந்திக்கச் சென்ற ஒரு நபர், பெருந்தலைவரைப் பார்த்துவிட்டு வருகிறேன் என்று சொன்னதற்காக, காமராஜரை அவமதிக்கும் பொருட்டே ஊராட்சி ஒன்றிய தலைவர்களை பெருந்தலைவர் என அழைக்க உத்தரவிட்டார் கருணாநிதி.

முன்பெல்லாம் ரஷ்யாவுக்கு எருமைத் தோலை அனுப்பினோம். தற்போது காமராஜரை அனுப்புகிறோம் என்று காமராஜரை கருணாநிதி அவமதித்துப் பேசினார். விருதுநகரில் கருவாடு விற்கும் சிவகாமியின் சீமந்த புத்திரன் என்றும் காமராஜரை வர்ணித்தார். தமிழர்களுக்கு திமுகவும் கருணாநிதியும் செய்த துரோகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல' என்றார்.

மேலும் அவர் கூறுகையில், தாயகக் கனவைச் சுமந்து உயிரைத் தற்கொடையாகத் தந்த மாவீரர்கள் நாளை திமுகவோ அல்லது அதன் கூட்டணிக் கட்சிகளோ எப்போதும் கொண்டாடுவதில்லை. நாம் தமிழர் கட்சி மட்டுமே அதனைச் செய்து வருகிறது. இனியும் தொடர்ந்து செய்யும்' என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.