மதுரை மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் சார்பில், பாபர் மசூதி இடிப்பு அனுசரிப்பு தினமான டிசம்பர் ஆறாம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
இந்நிலையில் பாபர் மசூதி தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொண்டதால் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தக்கூடாது எனவும், பாபர் மசூதி தொடர்பாக இனி சுவரொட்டிகள் ஒட்டினால் எஸ்டிபிஐ கட்சியை அழித்துவிடுவோம் எனவும் கூறி இந்து முன்னணி தெற்கு பகுதி தலைவர் பச்சை கனி, எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட அலுவலகத்திற்கு மிரட்டல் கடிதம் ஒன்றை தபால் மூலமாக அனுப்பியுள்ளார்.
இதனையடுத்து மிரட்டல் கடிதம் விடுத்த நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரி, எஸ்டிபிஐ கட்சி மாவட்ட நிர்வாகிகள் இன்று மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட தலைவர் முஜிபூர் ரஹ்மான் பேசியபோது, 'ஜனநாயக ரீதியாகப் போராடினால் கட்சியை அழித்து விடுவோம் என மாவட்ட அலுவலகத்திற்கு மிரட்டல் கடிதம் அனுப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற செயல்களால் மதரீதியான மோதல்கள் உருவாகும் நிலை உள்ளது. எனவே, கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: