ETV Bharat / state

சிலை கடத்தல் வழக்கு: சுபாஷ் சந்திர கபூரின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி!

author img

By

Published : Oct 13, 2020, 1:07 AM IST

சிலை கடத்தல் வழக்கில் கைதான சுபாஷ் சந்திர கபூரின் ஜாமீன் மனு ஏற்கெனவே தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது

c
hc

இந்தியாவில் இருக்கும் பழமை வாய்ந்த ஐம்பொன் சிலைகளை சட்டத்துக்கு புறம்பாக திருடிச் சென்று, அமெரிக்காவில் விற்பனை செய்துவந்தவர் சுபாஷ் சந்திர கபூர். இவர் திருடிச் சென்ற சிலைகளை நியூயார்க்கில் விற்பனை செய்வது குறித்து அறிந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர், இந்தியாவிடம் சிலைகளை மீண்டும் ஒப்படைக்குமாறு நியூயார்க் காவல் துறைக்கு தகவல் அனுப்பியதன் பேரில், சுபாஷ் சந்திர கபூர் சிலைகளை கடத்திச் சென்று விற்பனை செய்தது அம்பலமானது.

இதையடுத்து, கடந்த 2011ஆம் ஆண்டில் அவரை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் சுபாஷ் சந்திர கபூர், தனது உடல்நலத்தை காரணம் காட்டி ஜாமீன் கேட்டு மதுரை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். ஆனால், அவரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மீண்டும் ஜாமீன் கேட்டு சுபாஷ் கபூர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை நீதிபதி இளந்திரையன் அமர்வில் நடைபெற்றது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன், இன்டர்போல் உதவியுடன் ஜெர்மன் காவல் துறையினரால் தான் சுபாஷ் கபூர் கைது செய்யப்பட்டார். இவரை இந்தியா கொண்டு வரும்போது ஜெர்மன் அரசுக்கு இந்தியா ஒரு உத்தரவாதத்தை அளித்துள்ளது. அதன்படி, இந்தியாவில் சிறை காலம் முடிந்தவுடன் அவரை மீண்டும் ஜெர்மன் காவல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டினார். இதையடுத்து நீதிபதி சுபாஷ் சந்திர கபூர் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.