ETV Bharat / state

சாத்தான்குளம் வழக்கு: ஆவணங்கள் கோரிய எஸ்ஐ ரகுகணேஷின் மனு தள்ளுபடி - hc, mdu, bench, sathankulam, case, document

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் கைதாகியுள்ள எஸ்ஐ ரகுகணேஷ் ஆவணங்கள் கோரி தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.

sathankulam
sathankulam
author img

By

Published : Sep 4, 2021, 7:21 AM IST

மதுரை: சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் கைதாகியுள்ள எஸ்ஐ ரகுகணேஷ், வழக்கின் ஆவணங்களை தனக்கு வழங்க உத்தரவிட என்று கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான தந்தை-மகன் கொலை வழக்கில் கைதாகியுள்ள எஸ்ஐ ரகுகணேஷ், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், "எனக்கு எதிரான வழக்கின் விசாரணை மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடக்கிறது. வழக்கு தொடர்பாக சிபிஐ ஆவணங்களைக் கேட்டு தாக்கல் செய்த மனு மாவட்ட நீதிமன்றத்தில் தள்ளுபடியானது.

இதுவரை எனக்கு வழக்கு தொடர்பான ஆவணங்கள் வழங்கப்படவில்லை. ஆவணங்களை வழங்கினால்தான் வழக்கை என்னால் எதிர்கொள்ள முடியும். பொய் சாட்சியம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், தவறான குற்றச்சாட்டுகள் உள்ளன. வழக்கின் ஆவணங்களை வழங்க மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு உத்தரவிட வேண்டும்,' என உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் நீதிபதி சதிகுமார் சுகுமார குரூப் எஸ் ரகு கணேஷின் மனுவை தள்ளுபடி செய்தார்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.