தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் தந்தை - மகன் கொலை வழக்கில் மூன்றாவது குற்றவாளியாக எஸ்.ஐ. ரகு கணேஷ் உள்ளார். தந்தை - மகனை காவல்துறை அடித்து சித்ரவதை செய்த விவகாரத்தில் ரகு கணேஷ் சம்பந்தப்பட்டிருப்பது தொடர்பான சாட்சிகள், ஆவணங்கள் சி.பி.ஐ. வசம் உள்ளன. இது தொடர்பாக 32 சாட்சிகளிடம் விசாரணை செய்யப்பட்டுள்ளது.
ரகு கணேஷூக்கு இந்த வழக்கில் பிணை வழங்கினால் சாட்சிகளை அச்சுறுத்தி கலைக்க வாய்ப்புள்ளது. ஆகவே சி.பி.ஐ. பதில் அறிக்கை தாக்கல் செய்து இறுதி வாதம் வைக்க கால அவகாசம் வேண்டும் என சி.பி.ஐ. தரப்பு வழக்கறிஞர் வாதிட்டு காவல்துறை சார்பு ஆய்வாளர் ரகு கணேஷூக்கு பிணைவழங்க கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி இளந்திரையன், சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ரகு கணேஷ் பிணை மனு மீதான விசாரணையை நவம்பர் 3ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: நீதிமன்றம் கண்டிப்பு; வழக்கை திரும்ப பெற்றார் ரஜினிகாந்த்!