ETV Bharat / state

சாத்தான்குளம் விவகாரம்: மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட காவல் ஆய்வாளர்!

மதுரை: சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், மருத்துவ சிகிச்சை முடிந்து மதுரை மத்திய சிறையில் மீண்டும்  அடைக்கப்பட்டார்.

சாத்தான்குளம் விவகாரம்: மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட காவல் ஆய்வாளர்

author img

By

Published : Jul 30, 2020, 9:29 PM IST

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் வியாபாரிகளான தந்தை-மகன் இருவரும் காவல் நிலையத்தில் வைத்து உயிரிழந்த விவகாரம் தொடர்பாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 10 காவலர்கள் சிபிசிஐடி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டு, தற்போது சிபிஐ அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. காவல் ஆய்வாளர் உள்பட எட்டு காவலர்களை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று, சிபிஐ அலுலவர்கள் விசாரணை நடத்தி வந்தனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக, ஸ்ரீதருக்கு திடீரென முதுகு தண்டுவடத்தில் வலி ஏற்பட்டதால், அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் காவல் ஆய்வாளருக்குப் பூரண குணமடைந்தவுடன் அவர் சிறைக்கு அழைத்துச் செல்வார் என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே அவரின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு மத்திய சிறையில் மீண்டும் ஸ்ரீதர் அடைக்கப்பட்டார். மேலும் பால் துரை, முத்துராஜ், முருகன் ஆகிய மூன்று பேரும் கரோனா பாதிக்கப்பட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.