ETV Bharat / state

"என்னை முதலமைச்சர் ஆக்கினால், 150 வயது வரை வாழும் ரகசியம் சொல்வேன்" - சரத்குமார் சொல்வதென்ன? - general meeting in Madurai

தன்னை முதலமைச்சர் ஆக்கினால், 150 ஆண்டுகள் வாழும் ரகசியம் சொல்வேன் என்றும் வீட்டிற்கு தாமதமாக வரும் பிள்ளைகளை ஊத சொல்லி சோதனை செய்வதில் தவறில்லை என்றும் ச.ம.க தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 29, 2023, 10:57 AM IST

Updated : May 29, 2023, 12:16 PM IST

நடிகர் சரத்குமார் மேடையில் பேசிய வீடியோ

மதுரை: பழங்காநத்தம் சுற்றுச்சாலையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 7வது பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து விளக்கப் பொதுக்கூட்டம் அக்கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார் தலைமையில் இன்று (மே 29) நடைபெற்றது. இதில் ஏராளமான சமத்துவ மக்கள் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அப்போது பொதுக்கூட்டத்தில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், 'தீர்மான விளக்கக் கூட்டத்தின் வாயிலாக உங்கள் 'நாட்டாமை' முதலமைச்சராக வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது என்றார். இது வருகிற 2026ஆம் ஆண்டு தேர்தலின் போது, தெரியவரும் என்று கூறினார். மது உடல் ஆற்றலை இழக்க செய்து மனஅழுத்தத்தை உண்டாக்கி வருவதாகவும், இது பல்வேறு போதைகள் இன்று பரிணமித்து கஞ்சா, குட்கா போன்ற பலவகையாக உருவெடுத்துள்ளதாக தெரிவித்தார். ஆகவே, அதனை கட்டுப்படுத்தும் பணியும் தரமாக நடைபெற்று வருகிறது என்றார். வருகிற 2025-ல் இளைஞர்கள் அதிகம் கொண்ட நாடாக உருவாகும் என்பதால் அவர்களின் மூளையை மழுங்கடிக்க செய்வதற்கான வெளிநாடுகளில் சதிதான் இந்த போதை பரவலாக்கம் என்று குற்றம்சாட்டினார்.

69 வயதான தான், 150 வயது வரை உயிருடன் வாழ்வதற்கான வித்தையை கற்றுள்ளதாக பேசிய அவர், தன்னை 2026-ல் அரியணையில் ஏற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். மேலும், தமிழ்நாட்டில் எத்தனை மதுக்கடைகள் இருந்தாலும் அவற்றை தனிமனித ஒழுக்கத்துடன் புறக்கணித்தாலே போதும், அவை தானாகவே மூடப்படும் என்று தெரிவித்தார். அதே நேரத்தில் போதைக்கு அடிமையாக இருப்பதை பள்ளி சிறுவர்களை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அரசை கேட்டுக்கொண்டார்.

கூடங்குளம் வந்தால் தான், மின்மிகை மாநிலமாக தமிழ்நாடு திகழும் என்பதற்காக உடலை வருத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டதாகவும், அதன்படி தற்போது பொருளாதாரம் முன்னோக்கி வருவதாகவும் அவர் கூறினார். தமிழ்நாட்டின் கல்வி இந்திய அளவில் சிறந்ததாக திகழும் சூழலில், அறிவார்ந்த இளைஞர்கள் இருந்தும் போதைக்கு அடிமையாக இருப்பதால் தமிழ்நாடு தள்ளாடுவதாக குற்றம்சாட்டினார். "social Drinking" என்கிற பேரில் பணியிடங்களில் மேலை நாட்டு கலாசாரங்களை இளைஞர்கள் தவிர்க்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார். இத்தகைய நிலையில், வேலை முடிந்தப் பிறகு வீட்டிற்கு தாமதமாக வரும் பிள்ளைகளை பெற்றோர்கள் வாயை ஊத சொல்லி சோதனை செய்யுங்கள் என்றும் அதில் தவறே இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், மது இல்லாத மாநிலங்கள் இந்தியாவில் உள்ள நிலையில், அம்மாநிலங்களில் குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளதை முன்மாதிரியாக கொண்டு தமிழ்நாட்டிலும் மது விலக்கை அமுல்படுத்த முன்வரவேண்டும் என்று அரசை வலியுறுத்தினார். அதன், முதல் நோக்கமாக, 'மதுவை தவிர்ப்போம்' என்பதை முன்னெடுத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆரோக்கியமான வாழ்க்கையை உருவாக்குவோம்' என்று கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: 3 அரசு மருத்துவ கல்லூரிகளின் உரிமம் ரத்து; 550 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவது எப்போது? - சி.விஜயபாஸ்கர் கேள்வி

Last Updated : May 29, 2023, 12:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.