ETV Bharat / state

சாத்தான்குளம் தந்தை - மகன் உயிரிழந்த விவகாரம் : சிபிஐ பதில் மனு திருப்தி அளிக்கவில்லை என நீதிபதி கருத்து - santhankulam case

மதுரை: சாத்தான்குளம் தந்தை - மகன் உயிரிழந்த வழக்கில் சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு திருப்தி அளிக்கவில்லை என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

court
court
author img

By

Published : Aug 17, 2020, 8:46 PM IST

நெல்லை மாவட்டம், கண்ணன்குளத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், "சாத்தான்குளத்தில் தந்தை, மகனான ஜெயராஜ், பெனிக்ஸ் ஆகியோர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறேன். சம்பவம் நடந்த அன்று இரவு 8.15 மணியளவிலேயே நான் காவல் நிலையம் வந்தேன். அப்போது ஜெயராஜ், பென்னிக்ஸ் மீதான புகாரில் கையெழுத்திடுமாறு உதவி காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் என்பவர் தெரிவித்தார். அவர் கட்டாயப்படுத்தியதன் பெயரில் நானும் கையெழுத்திட்டேன். அதைத்தவிர வேறு எந்த செயலிலும் நான் ஈடுபடவில்லை.

இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை ஏற்கனவே தடயவியல் துறை அலுவலர்கள் சேகரித்து விட்ட நிலையில் தற்போது விசாரணையும் முடிவடைந்துள்ளது. இந்த வழக்கில் பிணை கோரி மதுரை மாவட்ட முதன்மை நீதித்துறை நடுவரிடம் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆகவே, இந்த வழக்கில் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனு இன்று (ஆக. 17) நீதிபதி பாரதிதாசன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், ”தந்தை - மகன் உயிரிழந்த வழக்கில், அவர்கள் இருவரையும் கடையிலிருந்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அவர்களிடம் வாக்குமூலம் பெற்று வழக்குப் பதிவு செய்வதில் முருகன் தான் முக்கியப் பங்கு வகித்துள்ளார்.

மேலும் சிபிஐ தரப்பில் 35 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விசாரணை அலுவலர்கள் தற்போதுதான் கரோனாவிலிருந்து மீண்டு திரும்பியுள்ளனர். எனவே விசாரணையைத் தொடர்ந்து நடத்துவதற்கு எங்களுக்கு கால அவகாசம் வேண்டும். ஆகையால் முருகனுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது” என தனது எதிர்ப்பைத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து நீதிபதி பாரதிதாசன், சிபிஐ சம்பந்தமான வழக்குகளில் மாவட்ட நீதிமன்றத்தில் எப்படி ஜாமீன் கோரி தாக்கல் செய்ய இயலும் என்று கேள்வி எழுப்பியும், சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு திருப்தி அளிக்கவில்லை எனக் கூறியும் வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க: ஜஸ்கிரீமில் விஷம்;குடும்பத்தை தீர்த்துக்கட்ட நினைத்த இளைஞன் - கேரளாவில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.