ETV Bharat / state

சாலை ஆக்கிரமிப்பு: நீதிமன்றம் அறிவுறுத்தல் - சங்கரன்கோவில் ரயில்வே பீடர் சாலை

நீதிமன்ற உத்தரவுக்கு காத்திருக்காமல் சாலை ஆக்கிரமிப்புகளை நகராட்சி ஆணையர்களே அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தியுள்ளது.

சாலை ஆக்கிரமிப்பு
சாலை ஆக்கிரமிப்பு
author img

By

Published : Jul 28, 2021, 12:00 PM IST

மதுரை: தென்காசியைச் சேர்ந்த வீரபத்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "சங்கரன்கோவில் ரயில்வே பீடர் சாலையில் தனி நபர்கள் கடைகள் அமைத்து சாலையை ஆக்கிரமித்துள்ளனர்.

மேலும் சாலையில் கோழி, மாடு வளர்ப்பதால் கழிவு நீர் மூலம் கொசுகள் அதிகளவில் உள்ளன. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. சாலை சுகாதாரமற்ற நிலையில் உள்ளது.

சட்டவிரோத ஆக்கிரமிப்பு

நகராட்சி இடத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இது தொடர்பாக உயர் அலுவலர்களுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே சங்கரன்கோவில் ரயில்வே பீடர் சாலையில் ஆக்கிரமிப்பை அகற்ற உயர் அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும்" என மனுவில் கோரியிருந்தார்.

நீதிபதிகள் எச்சரிக்கை

இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், அனந்தி ஆகியோர் அமர்வில் நேற்று (ஜூலை 27) விசாரணைக்கு வந்தது. ரயில்வே பீடர் சாலையில் மட்டுமல்லாமல் நகராட்சி முழுவதும் இதுபோன்று சுகாதாரமற்ற முறையில் ஆக்கிரமிப்பு செய்துள்ள சாலையோர கடைகள் அனைத்தையும் நகராட்சி நிர்வாகம் உடனடியாக அகற்ற வேண்டும்.

சாலைகள் ஆக்கிரமிப்பு விவகாரத்தில் நகராட்சி ஆணையர்கள் நீதிமன்ற உத்தரவை எதிர்பார்க்காமல் தாங்களாகவே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட நேரிடும் என கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க: பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு: 3ஆவது முறையாக ஸ்டாலின் அரசு உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.