கரோனா நோய்த் தொற்று பரவுதல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில், நோய்த் தொற்றை கட்டுப்படுத்த மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் துறையினர், தூய்மைப் பணியாளர்கள், பத்திரிகையாளர்கள் இரவுப் பகலாக பணிபுரிந்து வருகின்றனர்.
இதனால், மத்திய மாநில அரசுகள், பொதுமக்கள், தனியார் அமைப்புகள் அவர்களை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் தூய்மைப் பணியாளர்களை கவுரவிக்கும் விதமாக திமுக சார்பில் சிவப்பு கம்பள வரவேற்புடன் பிரியாணி விருந்து அளிக்கப்பட்டது.
இந்த விருந்தில் திருப்பரங்குன்றம் பகுதியில் பணிபுரியும் 150 தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர் விருந்தில் கலந்து கொண்ட தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி, காய்கறி தொகுப்பினை மதுரை திமுக தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் வழங்கினார்.
இதையும் படிங்க:தூய்மைப் பணியாளர்களைக் கையெடுத்து வணங்கிய அதிமுக எம்.எல்.ஏ!