ETV Bharat / state

சவுடு மண் வழக்கு: மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு! - மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை: சவுடு மண் வழக்கு தொடர்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு
author img

By

Published : Aug 17, 2020, 3:46 PM IST

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மணலூரைச் சேர்ந்த பொற்கோ என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், "சிவகங்கை மாவட்டம் வைகை நதிக்கரையில் அமைந்துள்ள கீழடி, அகரம், கொந்தகை, மணலூர், பாசியாபுரம் ஆகிய கிராமங்களில் தொல்லியல் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. தற்போது அங்கு வாழ்ந்த மனிதர்கள் நாகரீகமாக வாழ்ந்ததற்கான பல ஆதாரங்கள் கிடைத்து வருகின்றன.

அங்கு கிடைத்து வரும் தமிழ் பிராமி எழுத்துக்கள், பண்டைய பொருள்கள் போன்றவை ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த மனிதர்களின் வாழ்க்கையை பிரதிபலித்து வருகிறன. இந்நிலையில் அரசியல் செல்வாக்கு மிக்க ஒருவர் மணலூர் பகுதியில் சவடு மண் எடுப்பதாக கூறி, அரசின் அனுமதி பெற்று அரசு விதிகளை மீறி விவசாய நிலங்களில் ஆழமாக குழி தோண்டி அளவுக் கதிகமான மணலை அள்ளி வருகிறார்.

இதனால் விவசாய நிலங்கள் பாதிப்படைவதுடன், தொல்லியல் ஆய்வுகளும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அப்பகுதியில் மணல் அள்ளுவதற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், "கீழடி அகழாய்வின் தொடர்ச்சியாக மணலூர் அகழாய்வு பணிகள் நடக்கும் இடத்திலிருந்து எவ்வளவு தொலைவில் மணல் எடுக்கப்படுகிறது. சவுடு மண் எடுப்பதற்கு அனுமதி பெற்றவர்கள், முறையாக அதை பின்பற்றுகிறார்களா? தினமும் அலுவலர்கள் மூலம் அந்த இடங்கள் ஆய்வு செய்யப்படுகிறதா?" எனக் கேள்வி எழுப்பினர்.

மேலும் தினமும் 10க்கும் மேற்பட்ட மணல் வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரனைக்கு வருகிறது. மணல் வழக்குகள் சம்பந்தமாக ஏற்கனவே பல்வேறு உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் மாவட்ட ஆட்சியர்கள் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நேரிடும் என எச்சரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் புகைப்படத்துகள் கூடிய பதில் மனு தாக்கல் செய்ய உத்தவிட்டு, வழக்கை செப்டம்பர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: ஊதிய உயர்வு விவகாரம் தமிழ்நாடு அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.