ETV Bharat / state

'மிகுந்த கவனத்தோடு இருந்தால்தான் குடும்பத்தை காப்பாற்ற முடியும்' - ஆர்.பி. உதயகுமார்

author img

By

Published : Jun 28, 2020, 7:12 PM IST

மதுரை: கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் வரை மிகுந்த கவனத்தோடு இருந்தால்தான் நம்மையும் குடும்பத்தையும் காப்பாற்ற முடியும் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

ஆர்பி உதயகுமார்  அதிமுக  அதிமுக அமைச்சர் ஆர்பி உதயகுமார்  மதுரை  திருமங்கலம்  madurai  thirumangalam  rb udhayakumar  admk  admk minister rb udhayakumar
'மிகுந்த கவனத்தோடு இருந்தால்தான் குடும்பத்தை காப்பாற்ற முடியும்'- ஆர்.பி. உதயகுமார்

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுக்கா பூசலம்பட்டி கிராமத்தில் தொகுதி பேவர் பிளாக் கற்கள் அமைக்கப்பட்ட சாலையை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் திறந்துவைத்தார். பின்னர் மக்களிடையே பேசிய அவர், "கரோனா நோய்த் தொற்றின் காரணமாக தனிமைப் படுத்தப்படுபவர்கள் மனச்சோர்வு, மன அழுத்தம் அடைகின்றனர். அதற்காக, தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் கவுன்சிலிங் என்கின்ற மனதை உற்சாகப் படுத்துகின்ற சிகிச்சை தருவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.

வீட்டில் ஒருவர் கவனமாக இல்லை என்றால்கூட, குடும்பத்தில் உள்ள அனைவரையும் தனிமைப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். தனிமைப் படுத்தப்படுதல்தான் நோய்த் தொற்றுக்கான முதல் சிகிச்சை. ஏனென்றால், இந்த நோய்த் தொற்றுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. ஒவ்வொரு கிராமமாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். மக்களிடம் விழிப்புணர்வு இருந்தால்தான், மக்களை காப்பாற்ற முடியும்.

மக்கள் கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் வரையில் கவனமாக இருக்கவேண்டும்- ஆர்.பி. உதயகுமார்

எத்தனையே சவால்களை கடந்து வந்திருக்கிறோம் என்று கூட பிரதமர் மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசியுள்ளார். எல்லையில், சீன ராணுவத்தை எதிர்கொள்வதற்குத் தேவையான பணிகளை மோடி செய்துள்ளார். எல்லையில் எதிரி வருவது தெரியும். ஆனால், இந்த கரோனா வைரஸ் எங்கு இருக்கிறது. எப்படி இருக்கிறது என்று எதுவும் தெரியாது.

ஆகவே நாம் மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டும். வெளியே செல்லும்போது முகக் கவசம் அணிந்து செல்லவேண்டும். தகுந்த இடைவெளியை கடைபிடிக்கவேண்டும். இந்த நோய்த் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கும் வரை நாம் மிகவும் கவனத்தோடு இருக்கவேண்டும். அப்படி இருந்தால்தான் நம்மையும் நம் குடும்பத்தையும் காப்பாற்ற முடியும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: கள்ளழகர் போன்றவர் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் - செல்லூர் ராஜூ புகழாரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.