ETV Bharat / state

பாலத்திலிருந்து தவறி விழுந்த எருமை மாடு - போராடி மீட்ட மீட்புப் படை வீரர்கள்

author img

By

Published : Apr 28, 2020, 1:29 PM IST

மதுரை: பாலத்தில் இருந்து தவறி விழுந்த எருமை மாட்டை, இரண்டு மணி நேரம் போராடி தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் மீட்டனர்.

பாலத்தில் தவறி விழுந்த எருமை மாடு
பாலத்தில் தவறி விழுந்த எருமை மாடு

கரோனா தொற்று மக்களிடம் பரவாமலிருக்க, நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஊர் முழுவதும் மக்கள் நடமாட்டம் இல்லாமல் போனது. இதனால் காட்டு விலங்குகள் சாதாரணமாக வெளியே உலாவத் தொடங்கியுள்ளது. மக்களுடன் வாழ்ந்த உயிரினங்களும் உணவின்றி வெளியே திரிவதும், இறப்பதுமாக உள்ளது.

பாலத்தில் தவறி விழுந்த எருமை மாடு

மதுரை வைகை ஆற்றின் நடுவே கட்டப்பட்டுள்ள பழமையான ஏ.வி.மேம்பாலத்தில் நடந்து சென்ற எருமை மாடு பாலத்தில் இருந்து, தவறி பாலத்தின் கீழே உள்ள கழிவு நீர் ஓடையில் விழுந்தது.

இதனைத்தொடர்ந்து எருமை மாட்டை மதுரை மாநகர் தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்கள் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் போராடி மீட்டனர்.

மேம்பாலத்திலிருந்து கால் தவறி விழுந்த எருமை மாட்டை, காப்பற்றக் கூட ஆட்கள் இல்லாமல், பின் மீட்புப் படையினர் வந்து காப்பாற்றியது தான் தற்போதைய நிலையாக உள்ளது.

இதையும் படிங்க: மத்தியக் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.