ETV Bharat / state

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான அறிக்கை வெளியீடு!

மதுரை: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் இறந்தவர்களின் குடும்பத்தை இன்று வரை நேரில் சந்திக்காமல் இருந்துவரும் முதலமைச்சர், அவர்களிடம் மன்னிப்பு தெரிவிக்க வேண்டும் என்று, மதுரை மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநர் ஹென்றி திபென் தெரிவித்துள்ளார்.

தூத்துக்கடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான அறிக்கை வெளியீடு
author img

By

Published : May 20, 2019, 7:37 PM IST

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான அறிக்கையை, மதுரை மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநர் ஹென்றி திபென் இன்று மதுரையில் வெளியிட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்," தூத்துக்குடியில் நடந்த படுகொலை சம்பவம் தொடர்பாக 14 பேரின் குடும்பத்திற்கு மரியாதை செய்யும் விதமாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இறந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 50 பேரை சந்தித்து அவர்களிடம் இருந்து வாக்குமூலம் பெற்று இந்த அறிக்கை தயாரிக்கபட்டுள்ளது. 13 தொகுப்புகளையும், 71 பக்கங்களையும் கொண்ட இந்த அறிக்கையை, ஆன்லைன் மூலமாகவும் மக்கள் பாக்கும்படியான வசதி செய்யபட்டுள்ளது. இறந்த பலரின் குடும்பங்களுக்கு இன்னும் நிவாரண தொகை முழுமையாக கிடைக்கவில்லை.

இறந்த குடும்பத்திற்கு அரசு வேலை தருவதாகக் கூறி பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு தலையாரி பணி வழங்கி உள்ளனர். அனைத்து அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களும் கொள்கை முடிவு எடுக்கவேண்டும் என கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்கள் வாழ சுற்றுச்சூழல் தூய்மையாக இருக்க வேண்டும் என நினைத்த அனைவரையும் பயங்கரவாதிகள் என கூறியுள்ளார்கள். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை முதலமைச்சர் இன்று வரை நேரில் சென்று பார்க்கவில்லை. எனவே அவர் இதற்காக மன்னிப்பு தெரிவிக்க வேண்டும்.

மதுரை மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநர் ஹென்றி திபென்

தூத்துக்குடி சம்பவத்தில் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். இறந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் குழந்தைகளுக்கு அவர்கள் விரும்பும் கல்வி நிறுவனத்தில் படிக்க அரசு நிதி வழங்கவேண்டும். ஆளுநர் மருத்துவமனை வருவதால் காயமடைந்த 13 நோயாளிகளை வெளியேற்றி உள்ளனர். அவர்களின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு மன்னிப்பு தெரிவிக்க வேண்டும்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், " தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடங்குவோம். மூன்று மாதத்தில் சிபிஐ விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். நான்கு மாதத்தில் நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என்றும் வலியுறுத்தினார்.

வெங்கடேஷ்வரன்
மதுரை
20.05.2019

*தூத்துக்குடி நீறுபூத்த ஓராண்டு என்ற தலைப்பில் தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக அங்கு நடந்த உண்மை சம்பவம் என்ன? இறந்தவர்களின் குடும்பத்தின் தற்போதைய நிலை என்ன என்பதை பற்றியை மதுரை மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குனர் ஹென்றி திபென் அறிக்கை வெளியிடு*

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து ஹென்றி திபென் பேசுகையில்,

கடந்த ஆண்டு 22 தேதி தூத்துக்குடியில் நடந்த படுகொலை சம்பவம் தொடர்பாக 14 பேர் குடும்பத்திற்கு மரியாதை செய்யும் விதமாக இந்த அறிக்கை வெளியிடு,

இறந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்த 50பேரை சந்தித்து அவர்களிடம் இருந்து வாக்குமுலம் பெற்று இந்த அறிக்கை தயாரிக்கபட்டுள்ளது,

இந்த அறிக்கை 13 தொகுப்புகளையும் 71 பக்கம் கொண்ட இந்த அறிக்கை,

இந்த அறிக்கையை ஆன்லையின் முலம் மக்கள் பாக்கும் வசதி செய்யபட்டுள்ளது,

இறந்த பலரின் குடும்பங்களுக்கு இன்னும் நிவாரண தொகை முழுமையாக  கிடைக்கவில்லை,

இறந்த குடும்பத்திற்கு அரசு வேலை தருவதாக கூறி பட்டபடிப்பு படித்தவர்களுக்கு தலையாரி பணி வழங்கி உள்ளனர்,

அனைத்து அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் கொள்கை முடிவு எடுக்கவேண்டும் என கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை,

மக்கள் வாழும் சுற்றுசூழல் தூய்மையாக இருக்க வேண்டும் என நினைத்த அனைவரையும் பயங்கரவாதிகள் என கூறியுள்ளார்கள்,

காசோலை வாங்கிக் கொண்டு மனித உரிமை செயல்பாட்டாளர்கள் செயல்படுத்தாத தூத்துக்குடி கண்காணிப்பாளர் பொய் குற்றச்சாட்டை கூறிகிறார்கள்,

தைரியமிருந்தால் 22 ஆம் தேதி வெளியீட முடியமா? என சவால் விடுத்தார்,

தூத்துக்குடி சென்று இறந்தவர்களின் குடும்பத்தை முதலமைச்சர் இன்று வரை பார்க்கவில்லை அவர்களிடம் மன்னிப்பு தெரிவிக்க வேண்டும்,

தூத்துக்குடி சம்பவத்தில் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விடுதிரும்பியவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்,

இறந்த குடும்பத்தை சேர்ந்தவர்களின் குழந்தைகளுக்கு அவர்கள் விரும்பும் கல்வி நிறுவனத்தில் படிக்க அரசு நிதி வழங்கவேண்டும்,

ஆளுநர் மருத்துவமனை வருவதால் காயமடைந்த 13 நோயாளிகளை வெளியேற்றி உள்ளனர்,

அவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு மன்னிப்பு தெரிவிக்கவேண்டும்,

தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடங்குவோம்,

மூன்று மாதத்தில் சிபிஐ விசாரணை அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்,

நான்கு மாதத்தில் நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்.

Visual send in mojo kit
Visual name : TN_MDU_01_20_PEOPLE'S WATCH HENRI TIPHAGNE PRESS MEET_TN10003

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.