ETV Bharat / state

சோழவந்தான் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் தீவிரம்..! - today latest news

Sholavandan Railway Station Renovation Work: மதுரை மாவட்டம் சோழவந்தான் ரயில் நிலையத்தில் அமிர்த் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.6.54 கோடி செலவில் ரயில் நிலைய சீரமைப்பு பணிகள் நடைபெறுவதாக மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Sholavandan Railway Station Renovation Work
Etv Bharatசோழவந்தான் ரயில் நிலையத்தில் மறு சீரமைப்பு பணிகள் தீவிரம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 8, 2023, 10:55 PM IST

மதுரை: சோழவந்தான் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 6.54 கோடி ரூபாய் செலவில் பயணிகள் வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த மேம்பாட்டுப் பணிகளின் ஒரு பகுதியாக ரயில் நிலைய அணுகுசாலை, வாகன காப்பகப்பகுதி ஆகியவை மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும் நடைமேடையின் வெளிப்பகுதியில் 400 மீட்டர் தூரத்திற்கு சுற்றுச்சுவர் எழுப்புதல், வயதானவர்கள், உடல் நலம் குன்றியோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் இருப்பு பாதையில் உள்ள இரு நடைமேடைகளுக்கும் பாதுகாப்பாக செல்லவும், அங்கிருந்து வெளியே வரவும் மின் தூக்கிகள் அமைத்தல் போன்ற பணிகளும் நடைபெற்று வருகின்றன.

தற்கால வளர்ச்சிக்கேற்ப ரயில் நிலைய கட்டிட முகப்பை மாற்றி அமைத்தல், ரயில் நிலைய அணுகு சாலை நுழைவாயிலில் அலங்கார வளைவு அமைத்தல், வெளி வளாக பகுதி மேம்பாடு, பாதசாரிகள் நடைபாதை, கூடுதல் கழிப்பறைகள், கழிப்பறைகளை பயணிகள் பயன்பாட்டுக்கு ஏற்ப மாற்றி அமைத்தல், பயணிகள் காத்திருக்கும் அறைகளை நவீனப்படுத்துதல், ரயில் நிலைய கட்டிடத்தை நவீனப்படுத்துதல், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பணிகளும் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது கட்டப் பணியாக மழைக்காலத்தில் பயணிகள் சிரமத்தை குறைக்கும் வகையில் நடைமேடையில் கூடுதல் மேற்கூரைகள் அமைத்தல், அவற்றின் மேல் 25 கிலோ வாட் சூரிய சக்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் ஒளி மின்னழுத்த தகடுகள் பொருத்துதல் போன்ற பணிகளும் நடைபெற இருக்கின்றன.

தற்போது மின் தூக்கிகள் அமைக்க அடித்தளம் அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. இரு நடைமேடைகளின் வெளிப் பகுதியில் 400 மீட்டர் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளில் 150 மீட்டர் நீளத்திற்கு செங்கல் சுவர் எழுப்பும் பணிகள் நிறைவு பெற்று விட்டன. தற்போது 150 மீட்டருக்கான மேல்பூச்சுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், 120 மீட்டர் நீளத்திற்கான ரயில் நிலைய அணுகு சாலை பணிகளும் நிறைவு பெற்றுவிட்டன. ரயில் நிலைய வெளி வளாகப் பகுதி மேம்பாடு, ரயில் நிலைய கட்டிட முகப்பு மாற்றி அமைப்பு போன்ற பணிகள் தொய்வில்லாமல் நடைபெற ரயில் நிலைய கட்டிட நுழைவாயில் இன்று (டிச. 8) முதல் மூடப்பட்டு உள்ளது.

இதுமட்டும் அல்லாது, பயணிகளின் வசதிக்காக ரயில் பயணச்சீட்டு வழங்கும் அலுவலகம் அருகே படிக்கட்டுகள் மற்றும் சாய்வுதளப் பாதையுடன் மாற்று நுழைவாயில் அமைக்கப்பட்டு உள்ளது. சோழவந்தான் ரயில் நிலையத்தில் நடைபெறும் மேம்பாட்டு பணிகளை ரயில் பயணிகள் வரவேற்றுள்ளனர் என மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ரூ.8 செலவில் 30 கி.மீ செல்லும் பைக்.. அசாம் இளைஞரின் அசத்தல் கண்டுபிடிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.