ETV Bharat / state

"சந்திரயான்-3 சாதனை போன்றது மதுரை அதிமுக மாநாடு" - ஆர்.பி.உதயகுமார் பெருமிதம் - etv bharat tamil

சந்திரயான்-3 நிலவில் சாதித்ததை போன்றே அதிமுக மாநாடு பூமியில் சாதனை படைத்துள்ளது என ஆர்.பி.உதயகுமார் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

”சந்திரயான்-3 நிலவில் சாதனை அதிமுக மாநாடு உலகில் சாதனை” ஆர்.பி.உதயகுமார் பெருமிதம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 23, 2023, 9:21 PM IST

மதுரை: எடப்பாடி பழனிச்சாமிக்கு "புரட்சித் தமிழர்"விருது வழங்கப்பட்டதையொட்டி தெப்பக்குளத்தில் சௌராஷ்டிரா கிளப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நலத்திட்ட உதவிகளைச் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வழங்கினார். இந்த நிகழ்ச்சிகள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது; தமிழகத்தில் பல்வேறு புரட்சிகரமான சாதனை திட்டங்களை எடப்பாடி பழனிச்சாமி வழங்கியதால், ”புரட்சித்தமிழர்” என்ற பட்டத்தை மதுரை மக்கள் சூட்டினார்கள் ஆனால் அவர் என்ன சாதனை செய்தார் என்று சில ஞானசூனியங்கள் பேசி வருகிறார்கள், அவர் செய்த சாதனைத் திட்டங்களைப் படித்துப் பார்த்தாலே தெரியும் அந்த பட்டத்திற்கு அவர் தகுதியானவர் என்று.

அது மட்டும் அல்ல மதுரை அதிமுக மாநாட்டில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன இதில் உலகப் பொதுமறையாகவும், தேசிய திருமுறையாகவும் விளங்கும், திருக்குறளை ”தேசிய நூலகமாக” மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், தமிழ்நாட்டில் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் தமிழ் மொழியை கட்டாயமாகப் பாட மொழியாகவும், பயின்று மொழியாகவும் சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 9 முதல் 15 வரையுள்ள தீர்மானங்கள் திமுக அரசைக் கண்டித்தும், ஸ்டாலினைக் கண்டித்து நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதில் 16ஆவது தீர்மானம் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பொய் மூட்டைகளை ஸ்டாலின் அவிழ்த்து விட்டு, திமுக அரசு தாரைவார்த்துக் கொடுத்ததைத் திருப்பி மாற்றி எழுத ஸ்டாலின் முயல்கிறார். இந்த கச்சத்தீவு பிரச்சனையில் கூட ஜெயலலிதா இருக்கும் பொழுது உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.அந்த கச்சத்தீவை மீண்டும் மீட்டுத் தர மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மேலும் அதிமுக ஆட்சி மலர தொடர்ந்து அயராது களப்பணி ஆற்றிவரும் தொண்டர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து இதுவரை யாரும் தீர்மானம் நிறைவேற்றவில்லை. அதேபோல் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி அமைக்கும் வியூகத்தின்படி செயல்படவும் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கவும் இதில் சூளுரை ஏற்கப்பட்டுள்ளது.

இதையெல்லாம் தெரியாமல், ஊடக விவாதங்களில் சிலர் பேசி வருவதை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை நகைச்சுவையாக தான் பார்க்கிறார்கள்.மென்பொருள் உற்பத்தியில் முதலிடத்தில் வந்ததாக முதலமைச்சர் கூறுகிறார், ஆனால் இன்றைக்கு தமிழகத்தில் பொருளாதார வல்லுநர்கள் அறிவுறுத்தியும் கடன்சுமையில்தான் முதலிடத்தில் உள்ளது.

ராகுல் காந்தி பிரதமர் ஆனவுடன் நீட் தேர்வு ரத்து செய்வார் என்று உதயநிதி கூறுகிறார். கடல் வற்றி கருவாடு தின்னலாம் என்று கொக்கு நினைத்து, கடைசியில் குடல் வற்றி இறந்தது போல் திமுகவின் பேச்சு உள்ளது. சந்திரயான் 3 நிலவில் சாதனை படைத்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற மாநாடு பூமியில் சாதனை படைத்துள்ளது என்றார்.

இதையும் படிங்க: சந்திரயான் -3: நிலவின் மேற்பரப்பில் லேண்டர், ரோவரின் பணி என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.