ETV Bharat / state

'கேபிள் டிவி வாடிக்கையாளர்கள் தனியாருக்கு மடைமாற்றம்’ - ஆர் பி உதயகுமார் குற்றச்சாட்டு - முதலமைச்சர்

தமிழ்நாட்டில் அரசு கேபிள் டிவி வாடிக்கையாளர்கள் 5 லட்சம் பேர் தனியாருக்கு மடைமாற்றம் செய்யப்பட்டதற்கு அரசு உரிய விளக்கம் சொல்ல வேண்டும் என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் குற்றச்சாட்டியுள்ளார்.

cable TV customers  private  RB Udayakumar  கேபிள் டிவி வாடிக்கையாளர்கள்  கேபிள் டிவி  ஆர் பி உதயகுமார்  அரசு  எதிர்க்கட்சித் துணைத் தலைவர்  தனியாருக்கு மடைமாற்றம்  எடப்பாடி பழனிச்சாமி  ஜெயலலிதா  முன்னாள் முதலமைச்சர்  முதலமைச்சர்  செட்டாப் பாக்ஸ்கள்
ஆர் பி உதயகுமார்
author img

By

Published : Nov 17, 2022, 9:34 AM IST

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு கேபிள் டிவி வாடிக்கையாளர்கள் 5 லட்சம் பேர் தனியாருக்கு மடைமாற்றம் செய்திருப்பது அதிர்ச்சிகரமாக உள்ளது. இந்த தொழிலில் தனியார் நிறுவனங்களின் ஆதிக்கம் மற்றும் கொள்ளையை தடுப்பதற்காக அரசு கேபிள் டிவி நிறுவனம் 4.1.2007 அன்று இந்திய நிறுவனங்கள் சட்டம் 1956 இன் கீழ் துவங்கப்பட்டது.

இதனை கண்துடைப்பாக தூங்கினாலும் கடந்த 2011 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அந்நிறுவனத்தை புனரமைத்து புத்துயிர் அளித்தார். குறைந்த கட்டணத்தில் கேபிள் சேவையை அதிமுக அரசு வழங்கியது. இந்தியாவிலேயே மாநில அரசு நிறுவனத்திற்கு டிஜிட்டல் உரிமம் வழங்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். இதனால் தான் மக்களிடத்திலே அரசு கேபிள் டிவிக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

142 கட்டணமில்லா அலைவரிசைகள் மற்றும் 49 கட்டண அலை வரிசைகளுக்கு ரூபாய் 220 மற்றும் ஜிஎஸ்டியை மாத கட்டணமாக நிர்ணயம் செய்து 1.2.2019 அன்று இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்தது.

இதற்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ரூ.220 மற்றும் ஜிஎஸ்டியாக இருந்த கட்டணத்தை 139 கட்டணமில்லா அலைவரிசைகள் மற்றும் 52 கட்டண அலைவரிசைகளுக்கு ரூபாய் 130 மற்றும் ஜிஎஸ்டியாக குறைத்து கட்டண நிர்ணயம் செய்து 31.7.2019 அன்று அறிவித்தார். இந்த கட்டணம் 10.8.2019 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்திய அளவில் உள்ள குறைந்த டிஜிட்டல் கேபிள் டிவி மாத கட்டணங்களில் நம்முடைய தமிழ்நாடு தான் முதன்மை இடத்திலே இருந்தது. ரூபாய் 130 மற்றும் ஜிஎஸ்டி என்ற சந்தா கட்டணம், உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு ரூபாய் 70 மற்றும் ஜிஎஸ்டி எனவும், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு ரூபாய் 60 மற்றும் எனவும் பகிர்ந்தளிக்கப்பட்டது.

அரசு கேபிள் டிவியின் கீழே 2017 ஏப்ரல் முதல் 36 லட்சம் இலவச செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்பட்டன. தற்போது 21 லட்சம் செட் டாப் பாக்ஸ் மட்டுமே செயலில் உள்ளன. 11 லட்சம் பாக்ஸ்கள் செயல்பாட்டில் இல்லை என்பது மிக அதிர்ச்சியாக உள்ளது.

இந்த அரசு கேபிள் டிவி வாடிக்கையாளர்கள் 5 லட்சம் பேரை தனியாருக்கு மாற்றம் செய்திருப்பது அரசு கேபிள் டிவிக்கு மூடுவிழா நடத்துகிற செயலாகும். இது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: வேலைவாய்ப்பு... கைலாசா கூறுவது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.