மதுரை: பெங்களூர் அருகே உள்ள எஸ்வந்த்பூர் வழியாக இயக்கப்படும் ராமேஸ்வரம் - ஹூப்ளி - ராமேஸ்வரம் வாராந்திர ரயில் சேவை டிசம்பர் மாதம் வரை இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ரயில் சேவை தற்போது மார்ச் மாதம் வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது.
கோடை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் ஹூப்ளியில் இருந்து ராமேஸ்வரம் வரை சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயில் தொடர்ந்து அக்டோபர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ரயிலை தற்போது மார்ச் மாதம் வரை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
Kindly note:
— South Western Railway (@SWRRLY) December 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Railway Board has approved to extend the services of following trains with existing timings, stoppages, composition and fare structure as per details mentioned below
ಕೆಳಗೆ ನಮೂದಿಸಿದ ವಿವರಗಳ ಪ್ರಕಾರ ಅಸ್ತಿತ್ವದಲ್ಲಿರುವ ಸಮಯಗಳು, ನಿಲುಗಡೆಗಳು, ಸಂಯೋಜನೆ ಮತ್ತು ದರದ ರಚನೆಯೊಂದಿಗೆ… pic.twitter.com/V74Y0Bdl7W
">Kindly note:
— South Western Railway (@SWRRLY) December 27, 2023
Railway Board has approved to extend the services of following trains with existing timings, stoppages, composition and fare structure as per details mentioned below
ಕೆಳಗೆ ನಮೂದಿಸಿದ ವಿವರಗಳ ಪ್ರಕಾರ ಅಸ್ತಿತ್ವದಲ್ಲಿರುವ ಸಮಯಗಳು, ನಿಲುಗಡೆಗಳು, ಸಂಯೋಜನೆ ಮತ್ತು ದರದ ರಚನೆಯೊಂದಿಗೆ… pic.twitter.com/V74Y0Bdl7WKindly note:
— South Western Railway (@SWRRLY) December 27, 2023
Railway Board has approved to extend the services of following trains with existing timings, stoppages, composition and fare structure as per details mentioned below
ಕೆಳಗೆ ನಮೂದಿಸಿದ ವಿವರಗಳ ಪ್ರಕಾರ ಅಸ್ತಿತ್ವದಲ್ಲಿರುವ ಸಮಯಗಳು, ನಿಲುಗಡೆಗಳು, ಸಂಯೋಜನೆ ಮತ್ತು ದರದ ರಚನೆಯೊಂದಿಗೆ… pic.twitter.com/V74Y0Bdl7W
அதன்படி சனிக்கிழமைகளில் காலை 06.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 06.15 மணிக்கு ராமேஸ்வரம் வந்து சேரும் ஹூப்ளி - ராமேஸ்வரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் (07355) ஜனவரி 6 முதல் மார்ச் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மறு மார்க்கமாக ராமேஸ்வரத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 09.00 மணிக்கு புறப்படும் ராமேஸ்வரம் - ஹூப்ளி ரயில் (07356), மறுநாள் இரவு 07.25 மணிக்கு ஹூப்ளி சென்று சேரும். இந்த ரயில் ஜனவரி 7 முதல் மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.