ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 27 வருடங்களுக்கும் மேலாக மதுரை சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன் கரோனா நிவாரண நிதிக்காக அவர் சிறையில் வேலை பார்த்த சம்பளத் தொகையிலிருந்து ரூபாய் 5000த்தை அவரது வழக்கறிஞர் திருமுருகன் மூலமாக தமிழ்நாடு முதலமைச்சருக்கு அனுப்பினார்.
மேலும் கரோனா தடுப்பு நடவடிக்கையின் கீழ் சிறை கைதிகளை சொந்தப் பிணையில் விடுவிப்பதுபோல் தன்னைப் போன்று 27 வருடங்களாக சிறையில் இருப்பவர்களுக்கும் நீண்ட பரோல் வழங்க வேண்டும் எனவும் மத்திய-மாநில அரசுகளுக்கு ரவிச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேபோல் ஏற்கனவே ஹார்வேர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கை அமைப்பதற்கு 20,000 ரூபாய், கஜா புயல் நிதிக்காக 5000 ரூபாய் என தனது சிறை சம்பளத்தில் இருந்து ரவிச்சந்திரன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க... முதலமைச்சர் நிவாரண நிதிக்கு மார்க்சிஸ்ட் நிதி வழங்க முடிவு - கே.பாலகிருஷ்ணன்!