அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ராஜேஸ்வரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்தார்.
அதில் “தற்போது எனக்கு 62 வயதாகிவிட்ட நிலையில், அடிக்கடி நோய்வாய் படுகிறேன். இந்நிலையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் எனது மகன் 27 ஆண்டுகளாக சிறையில் உள்ளான். இதேபோல் வாடும் பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்தின் ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழ்நாடு அரசு முடிவு செய்யலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து அவர்களை விடுதலை செய்யலாம் என்று தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு பரிந்துரைத்தது. இதற்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் வழங்காமல் உள்ளார். இதனால் ஆளுநர் ஒப்புதல் பெற தொடர்ந்து காலதாமதம் ஆகிவருகிறது. எனவே ரவிச்சந்திரனுக்கு வழக்கு முடியும் வரையில் பரோல் வழங்கி உத்தரவிட வேண்டும்” என மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் ராஜா அமர்வு, பரோல் கோரினால் வழங்கலாம் என கடந்த முறை நீதிமன்றத்தில் கூறிய நிலையில், ரவிச்சந்திரன் விண்ணப்பம் ஏன் நிராகரிக்கப்பட்டது.
குற்றவாளிகளை விடுவிக்கலாம் என தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்றியிருக்கும் நிலையில், இது போல விண்ணப்பங்களை ஏன் நிராகரிக்கப்படுகிறது என கேள்வி எழுப்பினர். மேலும் இது குறித்து, தமிழ்நாடு சிறைத்துறை செயலர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஜனவரி முதல் வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க...உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திருநங்கை