மதுரை சிம்மக்கல் பகுதியில் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் தேவதாஸ் மருத்துவமனை சார்பாக மாவட்ட செயலாளர் ரபீக் தலைமையில் பொதுமக்களிடையே டெங்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.
அப்போது மன்ற மாநகர் பொறுப்பாளர் பால தம்புராஜ், 'ரஜினிகாந்த் உத்தரவின் பேரில் பொது மக்களுக்கு சேவை செய்யும் வகையில் தமிழ்நாடு முழுவதும் டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ சேவை அளிக்கப்பட்ட வருகிறது என்றார்.
டெங்கு மலேரியா உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் பரவுவதை தடுக்க சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை' - டெங்குவால் உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் வேதனை!