ETV Bharat / state

”கட்சி பேர எப்போவேணா அறிவிச்சிக்கோங்க...நான் வேட்பாளர்” - போஸ்டர் ஒட்டிய விநோத ரஜினி ரசிகர்! - ரஜினிகாந்த் அரசியல் கட்சி

மதுரை : தன்னை சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராக அறிவித்துக் கொண்டதுடன், ரஜினிக்கு நன்றி தெரிவித்து அவரது ரசிகர் ஒருவர் ஒட்டியுள்ள சுவரொட்டி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

போஸ்டர்
போஸ்டர்
author img

By

Published : Oct 23, 2020, 10:20 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்களே இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன. இதற்கிடையில், தன்னுடைய அரசியல் கட்சியின் பெயரை எப்போது அறிவிக்கலாம் என்பது குறித்து ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

முதலமைச்சர் பதவியை தான் நினைத்துக் கூட பார்க்கவில்லை என்றும், இளைஞர்களிடம் எழுச்சி ஏற்பட்ட பிறகுதான் தான் அரசியலுக்கு வருவேன் என்றும் நடிகர் ரஜினிகாந்த் முன்னதாகத் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, ரஜினிகாந்த் எப்போது தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

வரும் நவம்பரில் ரஜினிகாந்த் தன்னுடைய கட்சியின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் நிலையில், மதுரை ஊமச்சிகுளம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர், ரஜினி அரசியலுக்கு வந்தது போலவும், சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்து விட்டது போலவும் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளார்.

அதில் "YES நான் வர்றேன்...நான் அரசியலுக்கு வருகிறேன், வாய்ப்பு தந்த சூப்பர் ஸ்டாருக்கு நன்றி! இவண், மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இருந்து சிவக்குமார்" என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளை அவர் வெளியிட்டுள்ளார். இது அப்பகுதியில் பேசுபொருள் ஆகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.