மூக்கையாத் தேவரின் 96வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை அரசரடி பகுதியில் உள்ள மூக்கையாத் தேவர் சிலைக்கு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோர் மாலை அணிவித்தனர்.
இதையடுத்து, அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், மதுரையில் நாளை ஐந்து இடங்களில் வாக்கு சேகரிக்க வருவதாகத் தெரிவித்தார்.
சமீபத்தில் அதிமுகவிலிருந்து திமுகவிற்கு கட்சி மாறிய ராஜகண்ணப்பன் குறித்துப் பேசுகையில், ராஜகண்ணப்பன் பதவிக்காகவும், சுயநலத்திற்காகவும் கட்சித் தாவக்கூடிய பச்சோந்தி எனவும், அவருடைய பேச்சை அவரது சொந்த சமுதாயமான யாதவ மக்கள் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் எனக் கடுமையாக விமர்சித்தார்.