ETV Bharat / state

ஒலிம்பிக் வீராங்கனை ரேவதிக்கு ரூ.7.5 லட்சம் பரிசுத் தொகை - Olympic athlete Revathi

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற தமிழ்நாடு வீராங்கனை ரேவதிக்கு 7.5 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையை ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டெல்லியில் வழங்கினார்.

பரிசுத் தொகை
பரிசுத் தொகை
author img

By

Published : Oct 1, 2021, 5:08 PM IST

மதுரை: டோக்கியோ ஒலிம்பிக் தடகளப் போட்டியில் இந்தியா சார்பாகப் பங்கேற்ற மதுரையைச் சேர்ந்த வீராங்கனை ரேவதிக்கு 7.5 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையை ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டெல்லியில் நேற்று (செப். 30) வழங்கினார்.

அண்மையில் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றிபெற்ற, பங்குபெற்ற ரயில்வே துறை விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு விழா நேற்று டெல்லியில் நடைபெற்றது.

இதில் அஸ்வினி வைஷ்ணவ் கலந்துகொண்டு வீரர்களுக்குப் பரிசுத்தொகை வழங்கி பாராட்டினார்.

ரயில்வே விளையாட்டு வீரர்களுக்கு பரிசு
ரயில்வே விளையாட்டு வீரர்களுக்குப் பரிசு

ரயில்வே விளையாட்டு வீரர்களுக்குப் பரிசு

ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீரர்களுக்கு தலா இரண்டு கோடி ரூபாய், வெண்கலம் வென்ற மூவருக்கு தலா ஒரு கோடி ரூபாய், போட்டிகளில் நான்காவது இடம் பிடித்த 12 பேருக்கு தலா 35 லட்சம் ரூபாய், ஆறாவது இடம் வந்த ஒரு வீரருக்கு 35 லட்சம் ரூபாய், போட்டிகளில் பங்குபெற்ற மதுரை ரயில்வே ஊழியர் ரேவதி உள்பட ஏழு பேருக்கு தலா 7.5 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.

ரயில்வே விளையாட்டு வீரர்களுக்கு பரிசு
ரயில்வே விளையாட்டு வீரர்களுக்குப் பரிசு

பதக்கங்களை வெல்ல வீரர்களுக்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர்கள் ஆறு பேருக்கு 82.5 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. சாதனைபுரிந்த விளையாட்டு வீரர்களுக்கு உரிய பதவி உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் ரயில்வே வாரிய முதன்மைச் செயல் அலுவலர் சுமித் சர்மா, உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

ரயில்வே விளையாட்டு வீரர்களுக்கு பரிசு
ரயில்வே விளையாட்டு வீரர்களுக்குப் பரிசு

இதையும் படிங்க: தாம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை: கட்டுக்கட்டாகச் சிக்கிய பணம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.