ETV Bharat / state

யார் இந்த பாயின்ட் மேன்கள்? என்ன வேலை செய்கிறார்கள்? - அறிந்துகொள்வோமே! - ரயில் சேவை

ரயில் நிலையப் பணியாளர்களின் தனிச்சிறப்பு வாய்ந்தவர்கள் பாயின்ட் மேன்கள். ரயில்கள் இயக்கத்தில் அவர்களது பணி மிகவும் இன்றியமையாததாகும்.

mdu
பாயின்ட் மேன்
author img

By

Published : Sep 11, 2022, 10:57 PM IST

மதுரை: ரயில் நிலையங்களில் பல ரயில் பாதைகள் இருக்கும். ரயில் நிலையத்திலிருந்து வரும் ரயிலை ஏதாவது ஒரு ரயில் பாதையில்தான் இயக்க முடியும். அதற்கு உதவி புரிவதுதான் "பாயின்ட்". ஒன்றுக்கும் மேற்பட்ட ரயில் பாதைகள் சந்திக்கும் இடங்களில் இந்த பாயின்ட்கள் இருக்கும். இதை கையாள்பவர்கள் "பாயின்ட் மேன்" என அழைக்கப்படுவர்.

நவீன தொழில் நுட்ப வளர்ச்சி இல்லாத காலத்தில் எல்லா பாயின்ட்களையுமே இவர்கள்தான் இயக்கினார்கள். உயரமான கட்டடப் பகுதியிலிருந்து பாயின்ட்களை இயக்கி, ரயில் ஓட்டுநர்களுக்கு சைகை மூலம் உதவி புரிந்து வந்தார்கள்.

பின்பு இந்த முறை கைவிடப்பட்டு பேனல் போர்டு விசைகள் மூலம் ரயில் நிலைய அலுவலர்களே பாயின்ட்களை இயக்கினர். சிவப்பு, பச்சை, மஞ்சள் கலர் விளக்குகள் பயன்பாட்டுக்கு வந்தன. தற்போது இதுவும் மாறி கம்பியூட்டர் மூலம் பாயின்ட்களை இயக்கி வருகின்றனர்.

இருந்தாலும் பெரிய ரயில் நிலையங்களில் ரயில்களை பராமரிப்பதற்குக் கொண்டு செல்ல மற்றும் பராமரிப்பு முடிந்தவுடன் எடுத்து வர மேனுவல் பாயின்ட்கள் பயன்பாட்டில் உள்ளன. பாயின்ட் மேன்கள், பாயின்ட்கள் பழுதாகாமல் இருக்க, தினமும் அதை துடைத்து சுத்தப்படுத்தி எளிதாக இயங்க எண்ணெய் பூசுகிறார்கள்.

பாயின்ட்கள் பழுதானால் அதற்கான பாதுகாப்பான மாற்று ஏற்பாடுகளை செய்கிறார்கள். ரயில்களில் இன்ஜின்களை இணைப்பது, விடுவிப்பது போன்ற பணிகளையும் பாதுகாப்பாக செய்கிறார்கள். வழியில் ரயில் பாதையில் பணிகள் நடந்தால் மற்றும் தடங்கல் இருந்தால் அது பற்றிய மெதுவாக செல்ல வேண்டிய எச்சரிக்கை அறிவிப்பை ரயில் இன்ஜின் பைலட்டுகளிடம் வழங்குகிறார்கள்.

பாயிண்ட் மேன்
பாயின்ட் மேன்

சிறிய ரயில் நிலையங்களில் ரயில்கள் நிற்காமல் விரைவாக செல்லும்போது, ஒருபுறம் நிலைய அலுவலரும் மறுபுறம் பாயின்ட் மேனும் பச்சைக் கொடியுடன் நின்று, ஓடும் ரயிலில் ஏதாவது குறைபாடு இருக்கிறதா? என ஆராய்கிறார்கள். பாதுகாப்பு குறைபாடு இருந்தால் உடனடியாக சிவப்புக்கொடியை காட்டி ரயிலை நிறுத்தி மாற்று ஏற்பாடு செய்கிறார்கள். ரயில் பெட்டி அல்லது ரயில் இன்ஜின் நிலையத்தில் நீண்ட நேரம் நின்றால், அவை தானாக நகர்ந்து செல்லாமல் இருக்க சக்கரங்களுக்கு அடியில் அடிக்கட்டை வைப்பது, சங்கிலிகள் இணைத்து பூட்டுவது போன்ற பணிகளிலும் ஈடுபடுவார்கள்.

இவர்களுக்கு பாதுகாப்பு புத்துணர்வு பயிற்சி குறிப்பிட்ட கால இடைவெளியில் வழங்கப்படுகிறது. மகளிர் இந்தப் பணிகளை செய்யும்போது பாயின்ட் உமன் என அழைக்கப்படுகின்றனர். இந்தப் பணிகளுக்கு தகுதியுள்ள இளைஞர்கள் ரயில்வே தேர்வு வாரியம் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

இதையும் படிங்க: No Entryயில் வாகனங்களை ஓட்ட வேண்டாம் - போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.