ETV Bharat / state

பொதுமக்கள் 100 மடங்கு கவனமாக இருக்க வேண்டும்: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் - madurai district news

மதுரை: ஊரடங்கில் அரசு தளர்வுகள் அளித்தாலும் தற்போது இருப்பதை போன்று மேலும் 100 மடங்கு பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் 100 மடங்கு கவனமாக இருக்கவும்
பொதுமக்கள் 100 மடங்கு கவனமாக இருக்கவும்
author img

By

Published : Aug 31, 2020, 9:57 PM IST

மதுரை திருமங்கலத்தில் உள்ள பயணியர் விடுதியில் தமிழ்நாடு வேளாண் பொறியியல் துறை, வேளாண் இயந்திரமயமாக்கல் இயக்கம் சார்பில் 2020 - 21ஆம் ஆண்டு திட்டத்தின் கீழ் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த விழாவில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது, "முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 14 முறை பேரிடர் மேலாண்மை குழுவுடன், 9 முறை மாவட்ட ஆட்சியர்களுடன், 11 முறை தலைமை செயலாளருடன் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி தொடர்ந்து பணியாற்றி வருகின்றார். அந்த வகையில், இந்தியாவிலேயே அதிக அளவில் கரோனா பரிசோதனை செய்யும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

இ-பாஸ் ரத்து, மதவழிப்பாட்டுத் தளங்கள் திறப்பு, பொது போக்குவரத்து நாளை முதல் தொடங்கவுள்ளது. இதுபோன்று மக்கள் விரும்பிய தளர்வுகளை அரசு வழங்கியுள்ளது.

பொதுமக்கள் 100 மடங்கு கவனமாக இருக்கவும் - அமைச்சர் வேண்டுகோள்!

ஊரடங்கில் அரசு தளர்வுகள் அளித்தாலும் தற்போது இருப்பதை போன்று மேலும் 100 மடங்கு பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, நாளை முதல் பேருந்து போக்குவரத்து, ஷாப்பிங் மால், ஜவுளிக்கடைகள் திறந்து விடப்பட்டுள்ளதால் மக்கள் கூட்டத்தை தவிர்த்து தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: இ பாஸ் முறை முழுமையாக ரத்து செய்யவில்லை - அமைச்சர் காமராஜ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.