ETV Bharat / state

பார்வதி யானைக்கு தாய்லாந்து மருத்துவர்கள் மூலம் சிகிச்சை - பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் - thailand

பார்வதி யானைக்கு தாய்லாந்து மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

பார்வதி யானைக்கு தாய்லாந்து மருத்துவர்கள் மூலம் சிகிச்சை - பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன்

author img

By

Published : Jun 27, 2022, 6:55 AM IST

மதுரை : மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள 26 வயதான பார்வதி யானையின் இடது கண்ணில் கண்புரை பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இதனைத் தொடர்ந்து இரண்டாம் கண்ணிலும் கண்புரை பரவியது.

இதற்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கால்நடை மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அதில் முன்னேற்றம் இருப்பதாக சொல்லப்பட்டது. இருந்த போதும் தாய்லாந்து மருத்துவர்கள் இரண்டு முறை வீடியோ கான்பரன்ஸ் வழியாக பார்வதி யானையை பார்வையிட்டு எந்த மாதிரியான சிகிச்சை அளிக்க வேண்டும் என பரிந்துரை செய்து வந்தனர்.

அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன்
அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன்

இந்நிலையில் தாய்லாந்து கசிசார்ட் பல்கலைக்கழக கால்நடை இணை பேராசியர் நிக்ரோன் தோங்திப் தலைமையிலான 7 பேர் கொண்ட கால்நடை மருத்துவக் குழு மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள யானை பார்வதியை நேற்று நேரில் பார்வையிட்டு அதற்கு கண்புரை பாதிப்பு எந்த அளவு உள்ளது. எந்த மாதிரியான சிகிச்சை அளிக்க வேண்டுமென ஆய்வு செய்தனர்.

அப்போது நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் யானை பார்வதிக்கு கண் பாதிப்புகளை கட்டுப்படுத்த தேவையான சிகிச்சை அளிக்கும்படி கேட்டுக் கொண்டார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் சேகர்பாபு பார்வதி யானையை நேரில் வந்து பார்வையிட்டார்.

தொடர்ந்து, மதுரை கால்நடை மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் சிகிச்சையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை, இடது கண்ணில் ஏற்பட்ட பாதிப்பு வலது கண்ணிலும் பரவ தொடங்கியது. இதுதொடர்பாக கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு தாய்லாந்து தூதரை சந்தித்து கோரிக்கை வைக்கப்பட்டது.

அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன்
அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன்

தாய்லாந்தில் தான் யானைக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய சிறந்த மருத்துவர்கள் இருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து 2 முறை வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தனர். தற்போது, தாய்லாந்து மருத்துவர்கள் 7 பேர் கொண்ட குழு நேரில் வந்து யானையை பரிசோதனை செய்துள்ளனர். இந்தப் பரிசோதனையானது இரு நாள்கள் நடைபெறுகிறது. சென்னையில் இருந்து வரும் மருத்துவ குழுவினருடன் இணைந்து இந்த பரிசோதனை இரண்டாவது நாளாக இன்றும் தொடரும்.

யானைக்கு அறுவை சிகிச்சை என்பது கடினமானது என்பதால் மருந்து மூலமாகவே குணப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. விலங்குகளின் நலனுக்காக திமுக ஆட்சியில் சுமார் 20 கோடி ரூபாய் அளவிற்கு சட்டப்பேரவையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என பிடிஆர் பழனிவேல் ராஜன் கூறினார்.

இதையும் படிங்க : வைத்தீஸ்வரன் கோயிலில் ஆனி மாத கிருத்திகை வழிபாடு: திரளான பக்தர்கள் பங்கேற்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.