ETV Bharat / state

மதுரை மக்களை காக்க முதலமைச்சர் உடனடியாக உதவ வேண்டும் - சு.வெங்கடேசன் எம்.பி., - தீவிரமடைந்து வரும் கரோனா

மதுரை: தீவிரமடைந்து வரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, உயிருக்கு போராடும் மக்களை காக்க முதலமைச்சர் உடனடியாக உதவ முன்வர வேண்டும் என்று மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கேடசன் வலியுறுத்தியுள்ளார்.

su.venkadesan
su.venkadesan
author img

By

Published : Jun 26, 2020, 5:13 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; "மதுரையில் கரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. நாள்தோறும் தொற்றாளர்களின் எண்ணிக்கை மூன்று இலக்கங்களில் வரத் தொடங்கியுள்ளது. இது மக்களுக்கு சற்றே பதற்றத்தையும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளது. இந்நிலையில், மாநில அரசின் செயல் மக்களுக்கு நம்பிக்கையூட்டுவதாக அமைய வேண்டும்.

மதுரை மாவட்டத்தில் தொற்று பரவும் (ஜூன் 22 தேதி புள்ளி விவரங்களின் அடிப்படையில்) வேகமானது (Growth rate) 7.9 விழுக்காடு இருக்கிறதென்று மத்திய சுகாதாரத்துறையின் குறிப்பு தெரிவிக்கிறது. இதே வேகத்தில் இந்த பரவல் இருக்குமானால், ஜூலை 21ஆம் தேதி மதுரை மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 7 ஆயிரத்து 883ஆக இருக்கும் என்று வரையறுக்கிறது.

ஜூலை 21ஆம் தேதி 7ஆயிரத்து 883 தொற்றாளர்கள் இருப்பார்களென்றால் அவர்களைக் கண்டறிய, இன்றைய விகிதாச்சாரப்படி ஜூலை 21ஆம் தேதிக்குள் 2 லட்சத்து 40 ஆயிரம் பேரைச் சோதனை செய்திருக்க வேண்டும். இனிவரும் நாள்களில் சராசரியாக 9 ஆயிரத்து 500 பேரைச் சோதனை செய்தாக வேண்டும். (சோதனையைக் குறைத்து தொற்றாளர்களைக் கண்டறியாவிட்டால் பரவும் விகிதமும் பாதிப்பாளர்களின் எண்ணிக்கையும் அதற்கு அடுத்து வரும் மாதங்களில் பல மடங்கு அதிகரிக்கும்) தொற்றாளர்கள் 7 ஆயிரத்து 883 பேரில், ஜூலை மாதத்தின் நடுவில் சுமார் 4 ஆயிரத்து 500 பேர் ஒரே நேரத்தில் அரசு மருத்துவமனையிலும் தனிமைப்படுத்தும் மையங்களிலும் இருக்கவேண்டிய சூழல் இருக்கும்.

இன்றைய நிலையில், நமது மருத்துவமனைகளில் சுமார் ஆயிரத்து 200 படுக்கைகள் மட்டுமே உள்ளன. இது தவிர தனிமைப்படுத்தும் மையங்கள் இன்னும் உருவாக்கப்படவில்லை. இரண்டு நாள்களுக்கு முன்னர் சிறப்புக் கண்காணிப்பு அலுவலர் மருத்துவர் சந்திரமோகனை நான் சந்தித்து பேசியபோது, உடனடியாக இரண்டாயிரம் படுக்கைகளை ஏற்பாடு செய்கிறோம் என்று கூறினார். அந்த இரண்டாயிரம் படுக்கைகளை ஏற்பாடு செய்தாலும் சுமார் ஆயிரத்து 300 படுக்கைகள் கூடுதலாக தேவைப்படும்.

இவ்வளவு சோதனைகளைச் செய்து தொற்றாளர்களைக் கண்டறிந்து, முறையான சிகிச்சை செய்தால் மட்டுமே அடுத்து வரும் மாதங்களில் நாம் பேரிழப்புகளை சந்திக்காமல் மீளமுடியும். குறிப்பாக ஜூன் மாதம் முதல் தேதியில் இருந்து 15ஆம் தேதிவரை சோதனைகளை அதிகப்படுத்தாதன் விளைவால்தான், இன்று (ஜூன் 26) மதுரை மாவட்டம் இவ்வளவு பெரிய பிரச்னையை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஜூன் 4ஆம் தேதியிலிருந்து தொடர்ச்சியாக இதுபற்றி நாங்கள் எடுத்துக்கூறியும் எதுவும் நடக்கவில்லை. நிர்வாகத் தோல்விக்கு ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் நலவாழ்வை விலையாகக் கொடுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

இதே நிலை இனியும் தொடர்வதை அனுமதிக்க முடியாது. நாளொன்றுக்கு குறைந்த பட்சம் 4 ஆயிரத்து 500 பேரையாவது சோதனை செய்வதை உறுதிப்படுத்த வேண்டும். உடனடியாக மருத்துவமனைகளிலும் கரோனா நலவாழ்வு மையங்களிலும் சேர்த்து 5 ஆயிரம் படுக்கைகளை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வளவு எண்ணிக்கையில் தொற்றாளர்கள் வந்தால், அதற்கேற்ப மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள், ஆய்வகப் பணியாளர்கள் ஆகியோரின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். இன்றைய நிலையில் மதுரை மருத்துவக் கல்லூரியில் கரோனா பரிசோதனைக்கான கருவிகளை இரட்டிப்பாக்கினால் மட்டுமே இவ்வளவு சோதனைகளைச் செய்ய முடியும். சோதனை செய்வதற்கான கருவிகளின் எண்ணிக்கையை உயர்த்தாமல் மேற்குறிப்பிட்ட எதையும் செய்ய முடியாது.

எனவே, பரிசோதனைக் கருவிகளை அதிகப்படுத்த உடனடியாக மாநில அரசு உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும். 15 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் மாநகராட்சிக்கு, மாநகரச் சுகாதார அலுவலர் (CHO) பணியிடம் இப்பொழுதுவரை நிரப்பப்படாமல் இருக்கிறது. இதற்கு அரசு என்ன விளக்கத்தை கொடுத்துவிட முடியும்? கரோனா தொற்று பரவலாக்கத்தை தடுக்க சிறப்புக் கண்காணிப்பு அலுவலராக மருத்துவர் சந்திரமோகன் நியமிக்கப்பட்டு கடந்த சில நாள்களாக பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதை வரவேற்கிறேன்.

ஆனால், தொற்றின் வேகத்தையும் செய்ய வேண்டிய பணிகளையும் கவனத்தில் கொண்டு மாநகராட்சி பகுதிக்கு மட்டும் சிறப்புக் கண்காணிப்பு அலுவலர் ஒருவர் தனியே நியமிக்கப்பட வேண்டும். அதேபோல தென்மாவட்டங்களுக்கான மண்டல அளவிலான சிறப்பு அலுவலர் ஒருவரும் தனியே நியமிக்கப்படவேண்டும். இவையெல்லாம் உடனடியாக விரைந்து செய்யப்பட வேண்டிய பணிகளாகும்.

தமிழ்நாடு முதலமைச்சரே உடனடியாக தலையிட்டு இக்கோரிகைகளை நிறைவேற்றுங்கள். மாவட்டத்திலுள்ள இரண்டு அமைச்சர்களும் உடனடியாக இது சம்பந்தமாக முதலமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுச் செல்லுங்கள். இப்பொழுது இத்தகைய திட்டமிடலும், நிர்வாக ஏற்பாடும் உறுதி செய்யப்படவில்லையென்றால் பேரிழப்பிலிருந்து மீள வழியேதும் இருக்காது" என வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: 'ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?': என்ன சொல்கிறார் முதலமைச்சர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.