ETV Bharat / state

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் - உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் அர்ச்சகர் பயிற்சி மாணவர்கள்! - Tamil Nadu Priest Training

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பிற்குத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது வரவேற்கத்தக்கது என அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தின் தலைவர் வா.ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 28, 2023, 10:48 PM IST

மதுரை: அனைத்து சாதியினரும் முறையாகப் படித்து, தகுதிப்படுத்திக் கொண்டால் அர்ச்சகர் ஆகலாம் என்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பிற்குத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது வரவேற்கத்தக்கது என தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சிபெற்ற மாணவர் சங்கத்தின் தலைவர் வா.ரங்கநாதன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், "சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் அர்ச்சகர் நியமனத்திற்காக கடந்த 2018ஆம் ஆண்டு விண்ணப்பங்களை வரவேற்று கோயில் நிர்வாக அதிகாரி உத்தரவினை பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவினை எதிர்த்து சுகவனேஸ்வரர் கோயிலில் அர்ச்சகராக இருக்கக்கூடிய சுப்பிரமணியம் குருக்கள் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு, கடந்த 23ஆம் தேதி நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் முன்பு விசாரணைக்கு வந்து தள்ளுபடியானது. இந்த தீர்ப்பை எதிர்த்து மனுதாரர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்குத் தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், 'ஆகம கோவில்களில் அர்ச்சகர்கள் பரம்பரையாக தான் நியமிக்க வேண்டும். தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என வாதிடப்பட்டது. இதனைக் கேட்ட நீதிபதிகள் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர்.

மேலும், அர்ச்சகர் நியமனத்தில் சாதிக்கு எந்த பங்கும் இல்லை. யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம். இந்த வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு செப்டம்பர் 22ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.

’’சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷின் தீர்ப்பு, அனைத்து இந்துக்களின் அர்ச்சகர் நியமனத்தில் முன்னேற்றத்தை காட்டும் தீர்ப்பாகும். குறிப்பாக, ஆகமத்தின் இரு பகுதிகளில் ஒன்றான பூஜை, சடங்குகள் தொடர்பான விசயங்களில் அரசு தலையிட முடியாதென்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை உறுதி செய்யும் நீதிபதி, ஆகமத்தின் மற்றொரு பகுதியென பிராமண அர்ச்சகர்கள் கூறும் அர்ச்சகர் நியமனம் குறித்தும் தெளிவுபடுத்தியுள்ளார்.

அர்ச்சகர் நியமனம் என்பது - மதச் சார்பற்ற நடவடிக்கை, அரசு , கோயில் நிர்வாகம், அறநிலையத்துறை ஆகியோர் சாதி வேறுபாடின்றி அர்ச்சகர் நியனத்தை மேற்கொள்ளலாம். விண்ணப்பிக்கும் அர்ச்சகர்கள், சம்மந்தப்பட்ட கோயிலின் ஆகமத்தைப் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது மட்டுமே தகுதி என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் சேசம்மாள், நாராயண தீட்சிதலு, ஆதித்யன், ஆதி சைவ சிவாச்சாரியார்கள் உள்ளிட்ட அனைத்து தீர்ப்புகளையும் முறையாக ஆராய்ந்து, சரியான பொருளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆகமத்தில் குறிப்பிட்ட சாதியினர் மட்டும்தான் கருவறையில் பூஜை செய்ய முடியும் என்று சொல்லியிருந்தாலும் அது செல்லாது என்ற தீர்ப்பின் விளக்கமே அர்ச்சகர் நியமனத்தில் முக்கியமானது.

சேலம் சுகனேசுவரர் கோயில் வழக்கில் தனி மத உட்பிரிவினர் என்ற கோரிக்கை எழாததால், இதற்கு தீர்வு காணப்படவில்லை. அர்ச்சகர் நியமனம் தொடர்பான அறநிலையத்துறை பணியாளர் விதிகள் 7 & 9 செல்லாது என்ற சென்னை உயர் நீதிமன்ற அமர்வின் 2022-ஆம் ஆண்டுத் தீர்ப்பிற்கு இன்றுவரை மேல்முறையீடோ, மறு ஆய்வு மனுவோ, இந்து சமய அறநிலையத்துறை தாக்கல் செய்யாததையும் தீர்ப்பு சுட்டிக் காட்டுகிறது.

எனினும் இத்தீர்ப்பை தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம் வரவேற்கிறது. அர்ச்சகர் நியமனத்திற்கான தடைகள் நீங்கியுள்ளது. எனவே இந்த வழக்கு உச்சநீதிமன்றம் செல்லும்முன், தமிழக அரசு அர்ச்சகர் பணி நியமனங்களை உடனடியாக வழங்க வேண்டும்" என அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் தலைவர் வா.ரங்கநாதன் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கொடை விழாவில் டன் கணக்கில் அசைவ விருந்து... ஆசையாய் உண்டு மகிழ்ந்த பக்தர்கள்...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.