இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”இந்த ஆண்டு பருவமழையின் போது 48 விழுக்காடு நீர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக பாதிப்புக்குள்ளாகும் என கணிக்கப்பட்டுள்ள 4,399 இடங்களை கண்டறிந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உள்ளோம். மாநில தீயணைப்பு பேரிடர் மூலம் நிவாரண பணிகளை மேற்கொள்ள ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் நிவாரண முகாம்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த முறை குடிமராமத்து பணிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. எனவே மழை பெய்தால் நீர்நிலைகள் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. மழைநீர் சேமிப்பை மக்கள் இயக்கமாக மாற்றி செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன” என்றார்.
இதையும் படிங்க: இடி மின்னலுடன் கனமழை - வீட்டிற்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் அவதி