ETV Bharat / state

"எம்.பி.சி., பட்டியலிலுள்ள சிறு குறு சாதியினரை இணைத்து எம்.எம்.பி.சி.,யாக அறிவிக்க வேண்டும்" - Small Community People

மதுரை: மிகப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள சிறு குறு சமூகங்களை இணைத்து மிக மிகப் பிற்படுத்தப்பட்டோர் என அறிவித்து அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என MBC பட்டியலில் உள்ள சிறுகுறு சமூக மக்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் மணி பாபா கோரிக்கை விடுத்துள்ளார்.

Community People
மணி பாபா
author img

By

Published : Feb 23, 2021, 11:01 PM IST

மதுரை மாவட்டம் கே.கே., நகரில் உள்ள சோகோ அறக்கட்டளை வளாகத்தில், தமிழ்நாடு MBC பட்டியலில் உள்ள சிறு-குறு சமூக மக்கள் கூட்டமைப்பின் சார்பாக செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

அதன் மாநிலத் தலைவர் மணி பாபா செய்தியாளர்களிடம் பேசிய போது, "தமிழ்நாடு முழுவதும் இன்று (பிப்.23) இட ஒதுக்கீடு கேட்டு பிற்படுத்தப்பட்டோர் (BC) பட்டியலில் உள்ள கோனார்(யாதவர்), நாடார், செட்டியார், பிள்ளைமார், அகமுடையார், மறவர், கள்ளர் சமூகங்கள் போராடி வருகிறார்கள். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) பட்டியலில் உள்ள வன்னியர் சமூக மக்களுக்கு தனியாக 20 விழுக்காடு இட ஒதுக்கீடு கேட்டு வன்னியர் சங்கங்களும், பாட்டாளி மக்கள் கட்சியும் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். MBC பட்டியலில் உள்ள வலையர், பிரன்மலைக்கள்ளர், மறவர் இட ஒதுக்கிடு கேட்டும் போராடி வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் புறக்கணிக்கப்பட்டு, வஞ்சிக்கப்பட்டு மிகவும் (MBC) பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள சிறுகுறு சமூகங்களான வண்ணார், மருத்துவர் (நாவிதர்), குலாளர், இசை வெள்ளாளர், ஆண்டிபண்டாரம், யோகிஸ்வரர், ஒட்டர், போயர் போன்ற சமூகங்களில் 20 விழுக்காடு மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். சலவைத் தொழிலும், துணி தேய்க்கும் தொழில் செய்யும் வண்ணார் சமூக மக்கள், முடி திருத்தும் தொழில் செய்யும் மருத்துவர் (நாவிதர்) சமூகம், மண்பாண்டம் தொழில் செய்து வரும் குலாளர் சமூகம், கல் உடைக்கும் தொழில் செய்யும் ஒட்டர், போயர் சமூகம், கோயில்களில் நாதஸ்வரம் வாசிக்கும் இசை வெள்ளாளர், கிராம கோவில் பூசாரி, பூக்கட்டும் தொழில் செய்யும் ஆண்டிபண்டாரம், யோகீஸ்வரர் சமூகங்கள் கல்வி, வேலை, வாய்ப்புகளில் முழுமையாக இட ஒதுக்கீடு பெற முடியாமல் MBC பட்டியலில் இருந்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு பழங்குடியினருக்கு (ST) 1 விழுக்காடு, தாழ்த்தப்பட்டோருக்கு (SC) 18 விழுக்காடு, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு (MBC) 20 விழுக்காடு, பிற்படுத்தப்பட்டோருக்கு (BC) 30 விழுக்காடு என மொத்தம் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி வருகிறார்கள்.

சிறுகுறு சமூக மக்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் மணி பாபா செய்தியாளர் சந்திப்பு

ஆனால், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் பிற்படுத்தப்பட்டோர் (BC) பட்டியலை A, B, C, D, E என ஐந்தாக பிரித்து இடஒதுக்கீடு வழங்கி வருவதை போல, கர்நாடகா மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டோர் (BC) பட்டியலை ஐந்தாக பிரித்து இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதே போல தமிழ்நாட்டிலும் BC, MBC பட்டியில் உள்ளவர்களை பல பிரிவாக பிரித்து இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

வண்ணார், மருத்துவர் (நாவிதர்), இசை வெள்ளாளர், குலாளர், ஆண்டிபண்டாரம், யோகீஸ்வரர், போயர், ஒட்டர் போன்ற சிறு சமூகங்களுடன் இன்னும் உள்ள குறு சமூகங்களை இணைத்து (MMBC - Most Most Backward Class) மிக மிக பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை உருவாக்க வலியுறுத்துகிறோம்.

MBC பட்டியலில் உள்ள சிறு குறு சமூகத்தை சேர்ந்தோருக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்து அனைத்து கட்சிகளும் வேட்பாளராக அறிவிக்க வலியுறுத்துகிறோம். பெரிய தனியார் நிறுவனங்கள் போல, தொழிற்கூடம் தொடங்குவதற்கு வங்கிகளில் வண்ணார், நாவிதர் சமூகத்தில் படித்த இளைஞர்களுக்கு ரூ.50 லட்சம் மானியத்துடன் கடன் வழங்க வேண்டும். MBC பட்டியலில் உள்ள சிறுகுறு சமூக மக்களான வண்ணார், நாவிதர், ஒட்டர், குலாளர், போயர், யோகீஸ்வரர், ஆண்டிபண்டாரம், இசை வெள்ளாளர் ஆகிய சமூக மக்களுக்கு 2 ஏக்கர் நிலமும், வீடு இல்லாதவர்களுக்கு வீட்டு மனை பட்டாவும், வீடு கட்டி கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.