மதுரையில் உள்ள தனது கட்சி பிரமுகரின் திருமண விழாவில் பங்கேற்பதற்காக வந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தல் போலவே உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தொடர்வோம் என்று கூறிய அவர் அதிமுக தலைமையிலான கூட்டணி உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரும் வெற்றியை பெறும் என்றார்
இதனைத்தொடர்ந்து தேர்தல் தோல்விக்கும் ஏதேனும் ஒரு கட்சியை குற்றம் சாட்டுவதில் எனக்கு உடன்பாடில்லை என்று கூறிய அவர், தேமுதிகவின் வாக்கு வங்கி குறைந்ததாக சொல்வதை ஏற்க முடியாது என்று தெரிவித்தார். பின்னர் மாநிலங்களவை இடத்தைப் பொறுத்தவரை பாட்டாளி மக்கள் கட்சி முன்னரே ஒப்பந்தம் போட்டு அதிமுகவிடம் கேட்டுப் பெற்றுள்ளது. ஆகையால் நாங்கள் அவ்வாறு யாரையும் வலியுறுத்தப் போவதில்லை என தெரிவித்தார்.