மதுரை: தமிழ்நாட்டில் அரசியலும் திரையுலகமும் பிரித்து பார்க்க முடியாத அளவிற்கு பின்னிப் பிணைந்துள்ளன. அரசியல் தலைவர்களின் போஸ்டர்களும், முன்னணி நடிகர்களின் போஸ்டர்கள் போட்டா போட்டியில் ஒட்டப்படுகின்றன. இதனிடையே விஜயின் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இறுதி கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனிடையே விஜய், சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் ரசிகர்கள் சந்திப்பையும் நடத்திவருகிறார்.
இந்த நிலையில், மதுரையில் உள்ள விஜய் ரசிகர்கள் அவரை அரசியலுக்கு அழைக்கும் வகையில், எத்தனை வாரிசுகள் இங்கு வந்தாலும் மக்கள் கொண்டாடும் தமிழ்நாட்டின் அரசியல் வாரிசே என்று போஸ்டர் அடித்துள்ளனர். அந்த போஸ்டரில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் உள்ளிட்டோரின் புகைப்படங்களும் அவர்களது வாரிசுகளின் புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன. உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றிருப்பது வாரிசு அரசியல் விவாதங்களை எழுப்பிய நிலையில் விஜய் ரசிகர்களின் இந்த போஸ்டர்கள் அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
இதையும் படிங்க:மீண்டும் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்த விஜய்!