ETV Bharat / state

காணாமல் போன செல்லப் பறவை: கண்டுபிடித்து தரக்கோரி போஸ்டர் - பறவையை கண்டுபிடித்து தரக்கோரி போஸ்டர்

மதுரையில் காணாமல் போன செல்லப் பறவையை கண்டுபிடித்து தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என அறிவித்து சுவரொட்டிகள் ஓட்டப்பட்டுள்ளன.

காணாமல் போன செல்ல பறவையை கண்டுபிடித்து தரக்கோரி போஸ்டர்

author img

By

Published : Jun 29, 2022, 10:15 PM IST

மதுரை: பெரியார் பேருந்து நிலையம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பராம். எல்ஐசி ஏஜென்ட் ஆக பணியாற்றி வருகிறார். இவர் தான் வளர்த்து வந்த செல்லப்பறவை ஒன்று காணாமல் போனதாகவும், அதை கண்டுபிடித்து தருவோருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் எனவும் போஸ்டர் ஒட்டியுள்ளார்.

பறவையின் அங்க அடையாளங்களுடன், அது தொலைந்த இடத்தையும், அவரது தொடர்பு விபரங்களையும் அதிலேயே குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து இது குறித்து சுப்பராம் கூறுகையில், “ஒன்றரை வருடங்களாக ஜோடியாக வளர்த்து வந்த நிலையில், பெண் பறவை மட்டும் கடந்த சில நாள்களுக்கு முன்னர் வீட்டிலிருந்து சென்று விட்டது.

காணாமல் போன செல்ல பறவையை கண்டுபிடித்து தரக்கோரி போஸ்டர்
காணாமல் போன செல்ல பறவையை கண்டுபிடித்து தரக்கோரி போஸ்டர்

இதன் காரணமாக இணையான ஆண் பறவை கவலையில் உணவு உண்ணாமல் தவித்து வருகிறது. பறவை எப்போது வேண்டுமானாலும் வீட்டிற்கு வரலாம் எனும் எதிர்பார்ப்பில் வாசல் கதவை கூட அடைக்காமலேயே வைத்துள்ளேன்.

இது குறித்து எனது நண்பர்களிடம் தகவல் கொடுத்தேன், அவர்கள் சுவரொட்டிகள் அடித்து ஊருக்கே தெரிவித்து விட்டார்கள். அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி” என்றார்.

இதையும் படிங்க: பின்னிப்பிணைந்து நடனமாடிய பாம்புகள் - வைரல் வீடியோ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.