மதுரை: தங்களுக்குப் பிடித்த நடிகர்களுக்கு போஸ்டர் ஓட்டுவதில், மதுரைக்காரர்கள் எப்போதும் வித்தியாசமானவர்கள். குறிப்பிட்டுச்சொல்ல வேண்டுமென்றால் அடங்காத அஜித் குரூப்ஸ், மாட்டுத்தாவணி விஜய் ரசிகர்கள் குழுவினர் தல, தளபதி படங்கள் வெளியீட்டின்போது போஸ்டர்கள் ஓட்டுவதில் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். ஒரு சில சமயங்களில் அது மோதலுக்கும் வழி வகுக்கும். அரசியல் போஸ்டர்கள் ஒட்டி சர்ச்சையில் சிக்கிக் கொள்வதும் மதுரையில் நிகழ்வது உண்டு.
அந்த வகையில், மதுரையில் தற்போது நடிகர் கார்த்தியின் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாழ்த்து போஸ்டரில் சற்று அரசியலையும் கலந்து இருப்பது தான் சர்ச்சைக்கான காரணம். தலைமைச்செயலகம் முன்பு நடிகர் கார்த்தி நிற்பது போலவும் , வலது பக்கம் எம்.ஜி.ஆரும், இடது பக்கம் கருணாநிதியும் இருப்பது போலவும் படங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் வேகமாகப் பரவ , நடிகர் கார்த்தி மறைமுகமாக ரசிகர்கள் மூலம் அரசியலுக்கு அடி போடுகிறாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
ஏனென்றால் கடந்த அதிமுக ஆட்சியின்போது நடிகர் கார்த்தி டிவிட்டரிலும் , சினிமாவிலும் அரசியல் பேசுவது உண்டு.
-
மூன்று விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக நம் பிரதமர் அறிவித்திருப்பது, தங்கள் உயிரையை ஈந்து போராடிய எளிய வேளாண் மக்களின் ஒருவருட இடைவிடாத போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் வரலாற்று வெற்றி. போராடியவர்களுக்கும் புரிந்து கொண்ட அரசுக்கும் அன்பும் நன்றியும்.#FarmersProstest
— Actor Karthi (@Karthi_Offl) November 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">மூன்று விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக நம் பிரதமர் அறிவித்திருப்பது, தங்கள் உயிரையை ஈந்து போராடிய எளிய வேளாண் மக்களின் ஒருவருட இடைவிடாத போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் வரலாற்று வெற்றி. போராடியவர்களுக்கும் புரிந்து கொண்ட அரசுக்கும் அன்பும் நன்றியும்.#FarmersProstest
— Actor Karthi (@Karthi_Offl) November 19, 2021மூன்று விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக நம் பிரதமர் அறிவித்திருப்பது, தங்கள் உயிரையை ஈந்து போராடிய எளிய வேளாண் மக்களின் ஒருவருட இடைவிடாத போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் வரலாற்று வெற்றி. போராடியவர்களுக்கும் புரிந்து கொண்ட அரசுக்கும் அன்பும் நன்றியும்.#FarmersProstest
— Actor Karthi (@Karthi_Offl) November 19, 2021
இதையடுத்து அகில இந்திய கார்த்தி மக்கள் நல மன்ற நிர்வாகிகள், மதுரை வடக்கு மாவட்ட புரட்சி வீரன் கார்த்தி மக்கள் நலமன்ற நிர்வாகிகளைக் கண்டித்து அறிக்கை வெளியிட்ட நிலையில், இந்த நிகழ்விற்கு வருத்தம் தெரிவித்து மதுரை கார்த்தி ரசிகர்கள் குழுவினர் பதில் கடிதம் எழுதி உள்ளனர். ஆனால், சம்பவம் நடிகர் கார்த்தியின் காதுகளுக்குச் செல்ல, தற்போது ரசிகர்கள் தேவையில்லாமல் வம்பில் மாட்டிவிடுகிறார்களே என அப்செட்டில் உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: பிறந்தநாளன்று மச்சான்ஸ்-களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நமீதா!