தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெறுவதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
இதனையொட்டி மதுரை நீதிமன்றம் அருகேயுள்ள முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, சிம்மக்கல் பகுதியிலுள்ள கருணாநிதி, நெல்பேட்டை அருகேயுள்ள அண்ணாதுரை ஆகியோரின் சிலைகள் துணியால் மூடி மறைக்கப்பட்டன.
மேலும் மதுரை மாவட்டம் முழுவதும் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிக் கொடிக்கம்பங்களை அகற்றும் பணியில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.