மதுரை: எஸ்.எஸ்.காலனி பாரதியார் 5ஆவது தெருவைச் சேர்ந்தவர்கள் சிவகுமார் - மேரிக்குட்டி தம்பதி. இவர்களுக்கு திருமணமாகி 35 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை இல்லாததால் தனித் தனியே வசித்து வந்துள்ளனர்.
கடந்த சில நாள்களாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மீண்டும் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சிவகுமார் தனது மனைவி மேரிக்குட்டியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். எஸ் எஸ் காலனி காவல் துறையினர் சிவக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே மதுரை ஆத்திகுளம் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் மதுரை கோ.புதூர் பகுதியில் உணவகம் நடத்தி வருகிறார். அவர் உணவகத்தில் இருந்த போது அங்கு வந்த கும்பல் திடீரென முத்துக்குமாரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியோடியது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கோ.புதூர் காவல்துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: ஹரியானாவில் மல்யுத்த வீராங்கனை சுட்டுக்கொலை