மதுரை மாவட்டம் தெற்குவாசல் பகுதியில் உள்ள கழிவுநீர்க் கால்வாயில் இளைஞர் ஒருவர் விழுந்து கிடப்பதாகக் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கிடைத்துள்ளது. பின் சம்பவ இடத்திற்கு வந்த தெற்குவாசல் காவல் நிலையத்தைச் சேர்ந்த சார்பு ஆய்வாளர் ஜான் சென்று பார்த்தபோது, இளைஞர் ஒருவர் மதுபோதையில் காயங்களுடன் கால்வாயில் கிடந்தது தெரியவந்தது.
இதனையடுத்து துரிதமாகச் செயல்பட்ட சார்பு ஆய்வாளர் ஜான், பொதுமக்களின் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இது குறித்து காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அந்த இளைஞர் அன்புநகர் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்றும், தண்ணீர் லாரி ஓட்டுநராக பணிபுரிகிறார் என்றும் தெரியவந்தது.
காவல் சார்பு ஆய்வாளர் ஜான் துரிதமாகச் செயல்பட்டு இளைஞனை மீட்ட காட்சியைத் தூரத்திலிருந்த ஒருவர் தனது செல்ஃபோனில் பதிவு செய்தார். தற்போது அந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து காவல் சார்பு ஆய்வாளருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இதையும் படிங்க : பாக்கத்தான் சுள்ளான்... போலீசாரிடம் எகிறிய இளைஞன்!