ETV Bharat / state

பாஜக ஆதரவாளர் மாரிதாஸ் வீட்டில் காவல்துறையினர் சோதனை!

author img

By

Published : Aug 1, 2020, 8:48 PM IST

மதுரை: பாஜக ஆதரவாளரான மாரிதாஸ் வீட்டில் சென்னை காவல்துறையினர் நடத்திய சோதனையில் முக்கியமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது.

பாஜக ஆதரவாளர் மாரிதாஸ் வீட்டில் காவல்துறையினர் சோதனை

யூ-டியூப், ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமுக வலைதளங்களில் மாரிதாஸ் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இவர் மீது தனியார் தொலைக்காட்சி நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில், மதுரை சூர்யா நகர் பகுதியில் உள்ள அவரின் வீட்டில் சென்னை மாநகர் தொழில்நுட்பப் பிரிவு கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் காவல்துறை அலுவலர்கள் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, விசாரணை நடத்துவதற்கான ஆவணங்களை காண்பித்து உள்ளே வருமாறு முதலில் மாரிதாஸ் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் உரிய விளக்கமளித்ததைத் தொடர்ந்து காவல்துறையினர் வீட்டிற்குள் சென்று மாரிதாஸ் பயன்படுத்திய லேப்-டாப், மொபைல், பென்-டிரைவ் உள்ளிட்டவற்றை சோதனை செய்தனர்.

அப்போது வழக்கு தொடர்பான ஆவணங்களை மட்டும் நகல் எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும், தனது சொந்த ஆவணங்களை எடுக்கக்கூடாது என மீண்டும் மாரிதாஸ் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில், லேப்-டாப்பில் உள்ள ஆவணங்களை காவல்துறையினர் பென்-டிரைவில் நகல் எடுத்துக் கொண்டனர். மாரிதாஸிடம் விசாரணை நடைபெற்ற பொழுது, மதுரை பாஜக தலைவர் சீனிவாசன், பாஜகவைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் மாரிதாஸ் வீட்டின் முன்பாக கூடியதால் பரபரப்பான சூழல் நிலவியது.

இதையும் படிங்க: மாரிதாஸுக்கு வாய்ப்பூட்டு போட்ட உயர் நீதிமன்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.