திருமங்கலம் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் சாலையில் சுற்றித் திரிந்த வாகன ஓட்டிகளை மடக்கி பிடித்த காவல் துறையினர், அவர்களை 50 தோப்புக்கரணம் போடவைத்து எச்சரித்து அனுப்பினார்.
பொதுமக்களின் உணவுத் தேவைகள், அன்றாட தேவைகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பலசரக்கு கடைகள், மார்க்கெட் உள்ளிட்டவை காலை 6 மணி முதல் மதியம் 2:30 மணி வரை திறந்திருக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் அருண் தலைமையிலான காவல் துறையினர், திருமங்கலம் - உசிலம்பட்டி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்குள்ள மூன்று பலசரக்கு கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மக்கள் கூட்டம் கூட்டமாக இருந்துள்ளனர்.
இதைக் கண்ட காவல் துறையினர், உத்தரவை மீறி கடைகளில் பொதுமக்களை நிற்க வைத்ததற்காக மூன்று கடை உரிமையாளர்களையும் கைது செய்தனர்.
இதையும் படிங்க: தேநீர் கடைகளை மூடி பொருள்களை பறிமுதல் செய்த காவல்துறையினர்