மதுரை: தஞ்சாவூரை சேர்ந்தவர் ராஜவர்மன், இவருக்கும் மற்றொரு நபருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாகத் தகராறு ஏற்பட்டுக் காவல் நிலையம் வரை சென்றது. இருவர் மீதும் தஞ்சாவூர் மாவடம் அம்மாபேட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையில், தன் மீதான வழக்கில் 4 மாதத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து விரைவில் வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என ராஜவர்மன், உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், ராஜவர்மன் மீதான குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு கடந்த 2022ஆம் ஆண்டு உத்தரவு பெற்றார்.
இதையும் படிங்க: "அலுவலர் தேர்வுகளில் இந்தி கட்டாயமில்லை" - NTA அறிவிப்புக்கு சு.வெங்கடேசன் வரவேற்பு!
ஆனால், உயர்நீதிமன்ற உத்தரவின் படி தற்போது வரை ராஜவர்மன் மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வில்லை. ஆகவே, இது வரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாதா தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை காவல் நிலைய ஆய்வாளர் கரிகால சோழன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி மீண்டும் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார் ராஜவர்மன்.
இந்த மனு நீதிபதி முரளி சங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, வழக்கில் குற்றப்பத்திரிகை தயார் செய்யப்பட்டு உள்ளது. இருந்த போதும், வழக்கு நடைபெறும் நீதிமன்றத்தில் ஏன் தாக்கல் செய்யவில்லை? எனக் கேள்வி எழுப்பினார். அதனைத் தொடர்ந்து வழக்கின் விசாரணை அதிகாரியாக உள்ள தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை காவல் நிலைய ஆய்வாளர் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது? என்றும் கேள்வி எழுப்பினார். மேலும், இந்த வழக்கு குறித்து அம்மாபேட்டை காவல் நிலைய ஆய்வாளர் கரிகால சோழன் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: அரசு வழக்கறிஞர்கள் சம்பளம் தொடர்பாக தலைமைச் செயலாளர் ஆஜராக நேரிடும் - உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!