ETV Bharat / state

பள்ளி அருகே உள்ள ஆழ்துளைக் குழியை மூடிய காவல் துறையினருக்கு குவியும் பாராட்டு!

மதுரை : பேரையூரில் பள்ளிக்கு அருகே மூடப்படாமலிருந்த ஆழ்துளைக் குழியை பொதுமக்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப காவல் துறையினர் உடனடியாக மூடியுள்ளனர்.

ஆழ்துளை குழியை மூடிய காவலர்கள்
author img

By

Published : Oct 29, 2019, 4:27 PM IST

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள சின்னகட்டளைப் பகுதியில் கட்டையன் கோயிலின் அருகே தோண்டப்பட்ட ஆழ்துளைக் குழி ஆபத்தான நிலையில் மூடப்படாமலிருந்துள்ளது.

ஆபத்தான நிலையில் ஆழ்துளைக் குழி
ஆபத்தான நிலையில் ஆழ்துளைக் குழி

இதன் அருகே அரசுப் பள்ளியும் இயங்கிவருவதால் அங்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பாக குழியை மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் மதுரை மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

ஆழ்துளை குழியை மூடிய காவலர்கள்
ஆழ்துளைக் குழியை மூடிய காவலர்கள்

இதனையறிந்த பேரையூர் தாலுகா சேடபட்டி காவல் நிலையத்தைச் சேர்ந்த சார்பு ஆய்வாளர் பாலுச்சாமி, காவலர் கருப்பையா ஆகியோர் பொதுமக்களின் உதவியுடன் அப்பகுதியில் உள்ள ஆழ்துளைக் குழியை பாதுகாப்பாக மூடினர்.

பொதுமக்களின் கோரிக்கையை உடனடியாகத் தீர்த்துவைத்த காவல் துறையினரை அப்பகுதி மக்கள் வெகுவாகப் பாராட்டிவருகின்றனர்.

இதையும் படிங்க : பயன்பாடற்ற ஆழ்துளை கிணற்றை தாமாக முன்வந்து மூடிய மக்கள்!

Intro:பொதுமக்கள் வேண்டுகோளை ஏற்று போர்வெல் குழியை மூடிய போலீஸார்

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே மூடப்படாமல் கடந்த பொருள் குழியை பொதுமக்கள் வேண்டுகோளை ஏற்று உடனடியாக மூடிய போலீசார். பொதுமக்கள் பாராட்டு.Body:பொதுமக்கள் வேண்டுகோளை ஏற்று போர்வெல் குழியை மூடிய போலீஸார்

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே மூடப்படாமல் கடந்த பொருள் குழியை பொதுமக்கள் வேண்டுகோளை ஏற்று உடனடியாக மூடிய போலீசார். பொதுமக்கள் பாராட்டு.

மதுரை மாவட்டம் பேரையூர் சின்ன கட்டளை பகுதியிலுள்ள கட்டையன் கோவிலின் அருகே தோண்டப்பட்ட ஆழ்துளை கிணறு ஒன்று மூடப்படாமல் கிடந்தது. இதனருகே பள்ளி ஒன்றும் இயங்கி வருவதால் அப்பகுதி மக்கள் அனைவரும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பாக அந்த குழியை மூட மதுரை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதனை அறிந்த பேரையூர் தாலுகா சேடபட்டி காவல் நிலைய எல்கைக்குட்பட்ட சேடபட்டி காவல் நிலையத்தைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் பாலுச்சாமி மற்றும் காவலர் கருப்பையா ஆகியோர் பொதுமக்கள் உதவியுடன் ஆழ்துளைக் கிணற்றை பாதுகாப்புடன் மூடினர். சின்ன கட்டளை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் போலீசாரை வெகுவாக பாராட்டினர்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டு பட்டியில் மூடப்படாத போர்வெல் குழியில் விழுந்து சுஜித் என்ற குழந்தை உயிரிழந்த நிலையில் மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள இந்த மரண குழி உள்ளூர் காவலர்களால் மூடப்பட்டது பாராட்டுக்குரியது என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.