மதுரை மத்திய சிறைச்சாலையில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கைதிகள் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். சிறையில் இருக்கும் கைதிகளுக்கு வெளியில் இருந்தும், சிறைக்காவலர்கள் மூலமாகவும் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகள் வழங்குவதாக மாவட்ட காவல்துறைக்கு புகார் வந்த வண்ணம் இருந்தது.
இதையடுத்து இன்று மாவட்ட உதவி ஆணையர் வெற்றிச்செல்வன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட காவலர்கள் அதிரடி சோதனை நடத்தினர். இதனால் சிறை வளாகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த சோதனையில் எந்தவித போதைப்பொருட்களும் கிடைக்கவில்லை என காவல்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.