ETV Bharat / state

மதுரையில் நம்பர் பிளேட் இல்லாத காவல் வாகனத்தில் இளைஞர் கடத்தல்? - மடக்கிப் பிடித்த பொதுமக்கள் - Numberplate-free guard vehicle

மதுரை: நம்பர் பிளேட் இல்லாத காவல் வாகனத்தில் இளைஞரை சிலர் அழைத்துச் சென்றதால் சந்தேகமடைந்த உறவினர்கள், கிராம மக்கள் அந்த வாகனத்தை சிறைப்பிடித்தனர்.

தனிப்படை காவல் வாகனம் சிறைப்பிடிப்பு
தனிப்படை காவல் வாகனம் சிறைப்பிடிப்பு
author img

By

Published : Dec 3, 2019, 8:38 AM IST

மதுரை குலமங்கலம் பகுதியைச் சேர்ந்த சூர்யா என்ற இளைஞரை நேற்று நள்ளிரவு வேனில் வந்த 4 பேர் தங்களை காவலர்கள் எனக்கூறி வண்டி பதிவுஎண் இல்லாத காவல் வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த இளைஞனின் உறவினர்கள் கிராம மக்கள் உதவியோடு அந்த வாகனத்தை விரட்டிச் சென்று சூர்யா நகர் சுங்கச்சாவடி அருகே மடக்கிப் பிடித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புதூர் காவல் ஆய்வாளர் வாகனத்தில் இருந்தவர்களிடம் விசாரணை செய்ததில், அவர்கள் கரூர் மாவட்டத்தில் இருந்து வந்த தனிப்படை காவலர்கள் என்றும் ஒரு வழக்கு தொடர்பாக தலைமறைவாக இருந்த குலமங்குலம் பகுதியைச் சேர்ந்த சூர்யா என்ற இளைஞரை கைது செய்ய வந்ததாகவும் கூறியுள்ளனர். இதனையடுத்து அவர்களது அடையாள அட்டையை பரிசோதனை செய்ததில் உண்மையான காவலர்கள் என்பதும் தெரியவந்தது.

தனிப்படை காவல் வாகனம் சிறைப்பிடிப்பு

அதனைத்தொடர்ந்து உடனடியாக காவல் வாகனத்திற்கு புதிய நம்பர் பிளேட் பொருத்தி அங்கிருந்து அனுப்பிவைக்கப்பட்டது. காவல் வாகனத்தில் இளைஞர் கடத்தப்பட்டதாக பரவிய தகவல் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: கஞ்சா விற்று மாமூல் கொடு... மூதாட்டியை பயமுறுத்தும் காவல்துறையினர்!

Intro:*மதுரையில் நம்பர் பிளேட் இல்லாத போலீஸ் வாகனத்தில் வாலிபர் கடத்தல்?- மடக்கிப் பிடித்த பொதுமக்கள்*Body:*மதுரையில் நம்பர் பிளேட் இல்லாத போலீஸ் வாகனத்தில் வாலிபர் கடத்தல்?- மடக்கிப் பிடித்த பொதுமக்கள்*

மதுரை குலமங்கலம் பகுதியை சேர்ந்த சூர்யா என்ற இளைஞரை நேற்று நள்ளிரவு வேனில் வந்த 4 பேர் தங்களை போலீஸ் என கூறிக்கொண்டு வண்டி எண் இல்லாத ஒரு வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர், இதனால் அதிர்ச்சியடைந்த இளைஞனின் உறவினர்கள் போலீஸ் என கூறி தன்னுடைய மகனை யாரோ கடத்திச் செல்கிறார்கள், எனக்கூறி அந்த கிராம மக்கள் அனைவருக்கும் தகவல் கொடுக்க பொதுமக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர்,அந்த வாகனத்தை விரட்டி வந்து சூர்யா நகர் சுங்கச்சாவடி அருகே மடக்கி பிடித்துள்ளனர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புதூர் காவல் ஆய்வாளர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் கரூர் மாவட்டத்தில் இருந்து வந்த தனிப்படை போலீசார் என்றும் ஒரு வழக்கு தொடர்பாக தலைமறைவாக இருந்த குலமங்குளம் பகுதியை சேர்ந்த சூர்யா என்ற இளைஞரை கைது செய்ய வந்ததாகவும் தங்கள் வந்த வாகனத்தில் இருந்த நம்பர் பிளேட் கழன்று கீழே விழுந்த காரணத்தால் வண்டியில் நம்பர் இல்லாமல் இருந்ததாகவும் கூறி உள்ளனர்,அதனை தொடர்ந்து அவருடைய அடையாள அட்டைகளை சரிபார்த்து புதூர் போலீசார் அவர்கள் உண்மையான போலீஸ் என்பதை உறுதி செய்தனர்,அதனை தொடர்ந்து உடனடியாக அவர்கள் வந்த வாகனத்திற்கு புதிய நம்பர் பிளேட் பொருத்திய பிறகு வாலிபரை கரூர் அழைத்து செல்ல அனுமதித்தனர், போலீஸ் வாகனத்தில் வலிபர் கடத்தல் என பரவிய தகவல் நள்ளிரவு மதுரையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.