மதுரை: ராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர் வெற்றிவேல். இவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீட் தேர்வு தொடர்பான பொதுநல வழக்கினை இன்று (அக்.8) தாக்கல் செய்துள்ளார்.
அதில், "தமிழ்நாட்டில் ஆட்சி பொறுப்பேற்றவுடன் நீட்தேர்வு நடத்தப்படாது என ஆளும் திமுக அரசு கூறியிருந்தது.
வாக்குறுதிக்கு தடையும், பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடும்
இருப்பினும் இந்தாண்டு செப்டம்பர் 12ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்று முடிந்தது. நீட் தேர்வு தடை செய்யப்படும் எனத் தமிழ்நாடு அரசு அளித்த வாக்குறுதியோ மாணவர்களின் மன குழப்பத்திற்கும், சிலர் தற்கொலை செய்து கொண்டதற்கும் காரணம்.
ஆகையால் தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என பொது இடங்களில் வாக்குறுதிகளை வழங்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட வேண்டும். மேலும் நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்துக்கு ரூ. 1 கோடியும், அழுத்தத்துக்குள்ளான மாணவர்களுக்கு ரூ.5 லட்சமும் இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
இதையும் படிங்க: நீட் தேர்வு விலக்கு பொய் வாக்குறுதி அல்ல- அமைச்சர் மா. சுப்பிரமணியன்